Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசியக் கோப்பை.. 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு.. கம்பேக் கொடுக்கும் இரு நட்சத்திர வீரர்கள்!

மும்பை: ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சாஹல் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

ஆசியக் கோப்பைத் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை செப்.2ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. இதனால் நாளுக்கு நாள் ஆசியக் கோப்பைத் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடரில் குரூப் சுற்றுப் போட்டிகள் நடத்தப்படும்.

 17 Member Squad of indian team for the Asia Cup 2023 announced

பின்னர் சூப்பர் 4 சுற்று நடத்தப்பட்டு கடைசியாக இறுதிப்போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்று அணியை தேர்வு செய்தனர்.

இந்த அணியில் நீண்ட மாதங்களாக காயமடைந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் இடதுகை பேட்ஸ்மேனுக்கான தேவை மிடில் ஆர்டரில் இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளதால், துணை கேப்டன் நியமனத்தில் மாற்றம் இருக்கலாம் என்று பார்க்கப்பட்டது. ஆனால் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே தொடர்கிறார். அதுமட்டுமல்லமால் வேகப்பந்துவீச்சாளர்களாக ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஸ்பின்னர்களாக அக்சர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கம் போல் ஐசிசி தொடரில் சாஹல் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பேட்ஸ்மேன்களாக ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, அக்சர் படேல், சஞ்சு சாம்சன் (பேக் அப் விக்கெட் கீப்பர்)

Story first published: Monday, August 21, 2023, 14:02 [IST]
Other articles published on Aug 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+