Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது லிஸ்ட்லயே இல்லயே.. இந்திய அணியில் அதிரடி 2 மாற்றம்.. ஆஸி.க்கு சாதகமாக விழுந்த டாஸ்.. காரணம் என்ன

விசாகப்பட்டினம் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி சற்று முன்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. மழை விட்டதால், எவ்வித பாதிப்பும் இன்றி போட்டி தொடங்கியது.

விசாகப்பட்டினத்தில் கடைசியாக நடைபெற்ற 5 ஒருநாள் போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணிகள் 2 முறையும், முதலில் பந்துவீசய 2 அணிகளும் வெற்றி பெற்று இருக்கிறது.

இதனால் ஆடுகளம் 100 ஓவரும் ஒரே மாதிரி தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடைசியாக நடைபெற்ற 5 ஒருநாள் போட்டியில் இரண்டு முறை முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது.

டாஸ்

டாஸ்

இந்த நிலையில், 2 நாட்கள் மழை பெய்து, ஆடுகளம் தார் பாயால் முடப்பட்டு இருந்ததால், ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும். இதன் காரணமாக முதலில் பந்துவீசும் அணிக்கே சாதகமான சூழல் நிலவும். இதனை கருத்தில் கொண்ட கேப்டன் ஸ்மித், முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.

2 மாற்றம்

2 மாற்றம்

ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்லுக்கு பதில் எலிசும், ஜாஸ் இங்லிஷ்க்கு பதில் அலெக்ஸ் கேரியும் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய ந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதால் பேட்டிங்கில் முதல் சில ஓவர்கள் கடும் சவாலாக இருக்கும் என்று கூறினார்.

 அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

அதன் பிறகு விக்கெட் கையிருப்பை வைத்து எவ்வளவு ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்யலாம் என்று ரோகித் கூறினார். இன்றைய ஆட்டத்தில் இஷான் கிஷனுக்கு பதில் தாமும், ஷர்துல் தாக்கூருக்கு பதில் அக்சர் பட்டேலும் அணிக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ரோகித், உலக கோப்பையில் 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.

 பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, சுப்மன் கில், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, கேஎல் ராகுல், 6, ஹர்திக் பாண்டியா, 7, ஜடேஜா, 8, முகமது ஷமி, 9, முகமது சிராஜ், 10, அக்சர் பட்டேல், 11, குல்தீப் யாதவ்

Story first published: Sunday, March 19, 2023, 13:39 [IST]
Other articles published on Mar 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+