Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே-வில் இளம் வீரருக்கு "ஜாக்பாட்" வாய்ப்பு.. 2 முக்கிய மாற்றம் - கூண்டோடு அணியை மாற்றிய RR

அபுதாபி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.2) டபுள் ஹெட்டர்ஸில், இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன

அபுதாபியில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

 அனைத்திலும் ஜெயிக்கணும்

அனைத்திலும் ஜெயிக்கணும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆஃப் முன்னேறி இருப்பதால், இந்த போட்டியின் முடிவு அவர்களை எந்த வகையிலும் பாதிக்காது. அதுவே, பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க ராஜஸ்தான் அணிக்கு இது மிக முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியோடு சேர்த்து அந்த அணிக்கு இன்னும் 3 போட்டிகளே மீதமுள்ள நிலையில், அவர் அனைத்துப் போட்டியிலும் வென்றாக வேண்டும்.

 டேவிட் மில்லர் பேக்

டேவிட் மில்லர் பேக்

இந்நிலையில், இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிட்டத்தட்ட அணியின் பாதி வீரர்களை மாற்றிவிட்டது. அந்த அணியில், எவின் லெவிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c & wk), ஷிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ஆகாஷ் சிங், மயங்க் மார்கண்டே, சேத்தன் சகாரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 சாம் கர்ரனுக்கு வாய்ப்பு

சாம் கர்ரனுக்கு வாய்ப்பு

அதேசமயம், சென்னை அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பிளே ஆஃப் முன்னேறிவிட்டதால், வேகப்பந்து வீச்சாளர் கேஎம் ஆசிஃப்க்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பிராவோவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, சாம் கர்ரனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (c & wk), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், ஷர்துல் தாக்கூர், கேஎம் ஆசிஃப், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 ஜெயித்தாக வேண்டும்

ஜெயித்தாக வேண்டும்

ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 11 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, 7 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று, 7வது இடத்தில் உள்ளது. ரன் ரேட்டும் மைனஸில் உள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அந்த அணி வென்றே ஆக வேண்டும். டேவிட் மில்லர், க்ளென் பிலிப்ஸ், ஷிவம் துபே ஆகியோர் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு கைக்கொடுக்கிறார்களா என்று பார்ப்போம்.

Story first published: Saturday, October 2, 2021, 20:21 [IST]
Other articles published on Oct 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+