Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நேரத்தில் 2 இந்திய அணிகள்.. ஜெய்ஷா சொன்னது சாத்தியமா? இது வரமா? சாபமா? - எப்படி நடக்கும்?

மும்பை: ஒரே நேரத்தில் 2 இந்திய அணிகள் இனி விளையாடும் என்று ஜெய்ஷா கூறி இருக்கிறார். இது எப்படி சாத்தியமாகும் என்பது குறித்து தற்போது காணலாம்.

ஐபிஎல் போன்ற தொடர்கள் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இதனால் மற்ற சர்வதேச போட்டிகள் நடைபெற முடியாத நிலை ஏற்படும்.

இதனை சமாளிக்க ஒரே நேரத்தில் இனி 2, 3, கிரிக்கெட் தொடர்களை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இந்த பிளானை முன் மொழிந்ததே இந்தியா தான்.

2 அணிகள்

2 அணிகள்

முதலில் இது சாத்தியமா என்று பார்ப்போம். மாற்றம் ஒன்று தான் மாறாதது. என் வேலையை செய்ய எனக்கு 2 கைகள் பத்தவில்லை என்று பலர் கூறி பார்த்து இருப்போம். அதே போல் தான் இந்தியா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பங்கேற்க இனி ஒரு அணி போதாது. ஐபிஎல் போட்டிகள் மூலம் தற்போது பல்வேறு இளம் வீரர்கள் நமக்கு கிடைத்துள்ளனர்.

பழைய முறை

பழைய முறை

இதனால், ஒரே நேரத்தில் 2 இந்திய அணிகளை தயார் செய்து அனுப்புவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. அவ்வளவு ஏன் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு வீரர்கள் என்றும், ஒருநாள் அணிக்கு ஒரு வீரர்கள் என்றும் இரு அணிகள் இருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டி முதலில் நடைபெற்று பிறகு ஒருநாள் போட்டி நடைபெறும்.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

தற்போது, ஒரே சமயத்தில் 2 அணிகள் வேவ்வெறு நாடுகளில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது, இதனை இங்கிலாந்து ஏற்கனவே தொடங்கிவிட்டது. தற்போது இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் எதிர்கொள்கிறது, அதே வேலையில் தற்போது இங்கிலாந்து ஒருநாள் அணி நெதர்லாந்துடன் ஒரே சமயத்தில் மோதுகிறது.

வரமா? சாபமா?

வரமா? சாபமா?

இது தான் தற்போது இந்தியாவிலும் நடைபெறுகிறது. ஒரு அணி, அயர்லாந்துடன் டி20யில் மோதும், அதே நேரத்தில் மற்றொரு அணி டெஸ்ட் போட்டியில் மோதும். நாளடைவில் ஒரு இந்திய அணி காலையில் டெஸ்ட் போட்டியிலும், மாலை நேரத்தில் மற்றொரு அணி டி20 போட்டியிலும் மோதும் நிலை ஏற்படலாம். இது நிச்சயம் வரம் என்றே சொல்ல வேண்டும். வாயப்புக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு இத வரப்பிரசாதமாக அமையும்.

Story first published: Friday, June 17, 2022, 16:57 [IST]
Other articles published on Jun 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+