Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் தமிழக வீரர்.. ஷர்துலை அடுத்து மேலும் 2 பேர் சேர்ப்பு?.. ரசிகர்கள் உற்சாகம்!

அமீரகம்: ஷர்துல் தாக்கூரை தொடர்ந்து மேலும் 2 வீரர்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் சேர்க்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஐபிஎல் தொடரானது சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து அனைவரின் கவனமும் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் பக்கம் திரும்பியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

நாளை (அக்டோபர் 17) முதல் அக்டோபர் 14ம் தேதி வரை டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெறவுள்ளது. தகுதிச்சுற்று போட்டிகள் வரும் ஓமனில் உள்ள மைதானத்திலும், சூப்பர் 12 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெறவிருக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இந்திய அணி மாற்றம்

இந்திய அணி மாற்றம்

ஏற்கனவே இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இணைக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மேலும் 2 வீரர்கள் காயம் காரணமாக வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தீவர ஆலோசனை நடைபெற்று வருகிறது. எனினும் காயமடைந்த அந்த இரண்டு வீரர்கள் யார் ? என்ற தகவல் வெளியாகவில்லை.

2 புதிய வீரர்கள்

2 புதிய வீரர்கள்

இந்நிலையில் அவர்களுக்கு பதிலாக ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ள பெங்களூர் அணியை சேர்ந்த ஹர்ஷல் பட்டேல், கொல்கத்தா அணியை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நிச்சயம் விரைவில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் முதல் ஆட்டம்

இந்திய அணியின் முதல் ஆட்டம்

இந்திய அணியானது இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் ஆட்டமாக 24-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. அதற்கு முன்னதாக சில பயிற்சி போட்டிகளில் இந்திய அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 16, 2021, 18:48 [IST]
Other articles published on Oct 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+