சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக 2 புதிய அணிகள்.. நாளை மறுநாள் அறிவிப்பு
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு மாற்றாக புதிய இரு அணிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதுகுறித்த அறிவிப்பு வரும் செவ்வாய்க்கிழமை வெளியாகும்.
ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டம், வரும் செவ்வாய்க்கிழமை, கூடுகிறது. அப்போது 2 வருட சஸ்பெண்ட் தண்டனைக்கு உள்ளாகியுள்ள, சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு மாற்றாக, புதிய அணிகள் இரண்டை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இவ்விரு அணிகளுமே, 2 ஆண்டுகளுக்கானதாக இருக்கும் என்று தெரிகிறது. கூட்டத்திற்கு பிறகு நடைபெற உள்ள நிருபர்கள் சந்திப்பின்போது, அணி விவரத்தை ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர், செயலாளர் அனுராக் தாகூர் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
Story first published: Sunday, December 6, 2015, 15:46 [IST]
Other articles published on Dec 6, 2015


Click it and Unblock the Notifications