Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 நிமிடம் இடைவெளியில்.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த பிளேயர்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் அணியில் "அதிர்ச்சி"

ஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணியில் அடுத்தடுத்து இருவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வெற்றி பெற்றது.

வெ.இ. வெற்றி

வெ.இ. வெற்றி

இதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி நேற்று (ஜுலை.2) ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை அடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான், 6 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

ஸ்ட்ரெச்சர்

ஸ்ட்ரெச்சர்

இந்த நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் இரண்டு பேர் அடுத்தடுத்து மைதானத்தில் மயங்கி விழுந்தனர். முதலில் சினெல் ஹென்றி என்ற வீராங்கனை திடீரென மைதானத்தில் மயங்கி விழ, உடனே ஸ்ட்ரெச்சர் கொண்டுவரப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

ஏன் மயங்கி விழுந்தனர்?

ஏன் மயங்கி விழுந்தனர்?

அடுத்த 10 நிமிடங்களில் செடியன் நேஷன் என்ற மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனையும் மைதானத்தில் மயங்கி விழ, பாகிஸ்தான் வீராங்கனைகளே பதறிப் போனார்கள். இதையடுத்து அவரையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்று, மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இரு வீராங்கனைகளும் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர்கள் எதற்காக மயங்கி விழுந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை.

வீடியோ வைரல்

வீடியோ வைரல்

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கோர்ட்னி வால்ஷ் கூறுகையில், "அந்த சூழலும், நிலைமையும் மிகவும் எளிதானது அல்ல. எங்களுடன் அந்த இரண்டு வீராங்கனைகளும் இல்லாத போதும், எங்கள் அணியால் வெல்ல முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் இருவர் குறித்த தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர்களுக்கு எங்கள் முழு ஆதரவும் உள்ளது, நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து விளையாடுவோம்" என்று கூறினார். இரு வீராங்கனைகளும் மயங்கி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, July 3, 2021, 18:26 [IST]
Other articles published on Jul 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+