Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீக்குள் பிஸ்கட்டை போட்டு ஸ்பூனால் சாப்பிட சச்சினுக்கு பிடிக்கும் தெரியுமா?

சென்னை: லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பற்றி சுவாரஸ்யமான சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

கிரிக்கெட் இருக்கும் வரை சச்சின் டெண்டுல்கரின் பெயரும் நிலைத்து நிற்கும் என்று தைரியமாகக் கூறலாம். மனிதர் அந்த அளவுக்கு பல சாதனைகளை செய்துள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சச்சின் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போம்.

பெயர்

பெயர்

பிரபல இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் என்றால் ரமேஷ் டெண்டுல்கருக்கு மிகவும் இஷ்டம். அதனால் அவரின் நினைவாக தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் என்று பெயர் வைத்தார்.

மெக்கென்ரோ

மெக்கென்ரோ

பிரபல டென்னிஸ் வீரர் ஜான் மெக்கென்ரோ போன்று சச்சின் ஒரு காலத்தில் நீளமாக முடி வளர்த்து தலையில் பேண்ட் அணிந்திருந்தார். அதனால் அவரை அவரது நண்பர்கள் மெக்கென்ரோ என்றே அழைத்தனர்.

மாரடோனா

மாரடோனா

சச்சினுக்கு டென்னிஸ் வீரர்கள் போரிஸ் பெக்கர், பீட் சாம்பிராஸ், ரோஜர் பெடரர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மாரடோனா ஆகியோர் மிகவும் பிடிக்கும்.

பந்துவீச்சாளர்

பந்துவீச்சாளர்

சச்சின் பந்து வீச்சாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காக அவர் எம்.ஆர்.எஃப். பேஸ் அகாடமியில் பயிற்சிக்கும் சென்றார். ஆனால் அவரை பேட்டிங்கில் கவனம் செலுத்துமாறு பயிற்ச்சியாளர் டென்னிஸ் லில்லீ தெரிவித்தார்.

பண்டிகைகள்

பண்டிகைகள்

சச்சின் பண்டிகை தினங்களான கோகுலாஷ்டமி, ரக்ஷா பந்தன், ஹோலி மற்றும் தீபாவளி தினத்தன்று அதிக ரன்கள் எடுத்துள்ளார்.

கடல் உணவு

கடல் உணவு

கடல் உணவான மீன், இரால் போன்றவை சச்சினுக்கும் மிகவும் பிடிக்கும். அவர் சொந்தமாக ஒரு ரெஸ்டாரன்ட் வைத்துள்ளார்.

கிஷோர் குமார்

கிஷோர் குமார்

இந்தி பாடகர் கிஷோர் குமாரின் பாடல்களும், ராக் குழுவான டையர் ஸ்ரெய்ட்ஸும் சச்சினுக்கு மிகவும் பிடிக்கும்.

பிள்ளையார் பக்தர்

பிள்ளையார் பக்தர்

சச்சின் ஒரு பிள்ளையார் பக்தர். அவர் அதிகாலையில் சித்திவிநாயகர் கோவிலுக்கு அடிக்கடி செல்வார்.

மூவர்ண கொடி

மூவர்ண கொடி

சச்சின் முதலில் இடது காலில் தான் பேட் மாட்டுவார். மேலும் தன்னுடைய கிட் பேக்கினுள் தேசியக் கொடியை ஒட்டி வைத்துள்ளார்.

பிஸ்கட்

பிஸ்கட்

குளுகோஸ் பிஸ்கட்டுகளை டீக்குள் போட்டு அதை ஸ்பூனால் சாப்பிட சச்சினுக்கு பிடிக்கும்.

இரு கை பழக்கம்

இரு கை பழக்கம்

சச்சின் வலது கையால் பேட்டிங் செய்வார். ஆனால் சாப்பிடுவது, ஆட்டோகிராப் போடுவது ஆகியவற்றை இடக்கையால் செய்வார்.

கார்

கார்

சச்சினுக்கு அதிகாலை நேரத்தில் காரில் மும்பையை சுற்றி வர பிடிக்கும்.

ஒத்த ரூபாய்

ஒத்த ரூபாய்

ஷர்தாஷ்ரமத்தில் சச்சினை அவுட்டாக்கும் பந்து வீச்சாளர்களுக்கு அவரது பயிற்ச்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர் ஒரு ரூபாய் நாணயத்தை வழங்கி வந்தார். சச்சின் அவுட்டாகாமல் இருந்தால் அந்த நாணயம் அவருக்கு தான். இது போன்று பெற்ற நாணயங்களை சச்சின் இன்றும் பத்திரமாக வைத்துள்ளார்.

பெண்ணோ

பெண்ணோ

சச்சினின் சுருட்டை முடியைப் பார்த்து அவர் பள்ளியில் படிக்கையில் அவர் பெண்ணோ என்று அவரது நண்பர் அதுல் ரானாடே தவறாக நினைத்துவிட்டார்.

அமிதாப் ரசிகர்

அமிதாப் ரசிகர்

தீவார் மற்றும் ஜன்ஜீர் ஆகிய படங்களை பார்த்த பிறகு சச்சின் அமிதாப் பச்சனின் ரசிகராகிவிட்டார்.

காலணிகள்

காலணிகள்

சக கிரிக்கெட் வீரர் பிரவீன் அம்ரே தான் முதன்முதலாக சச்சினுக்கு தரமான கிரிக்கெட் ஷூக்களை வாங்கிக் கொடுத்தவர்.

ஆயா

ஆயா

சச்சினை சிறுவயதில் கவனித்துக் கொண்ட ஆயா சச்சுச்சி பாய் என்று அழைக்கப்படுகிறார்.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

கபில் தேவின் 100வது டெஸ்ட் போட்டி தான் சச்சினின் முதல் டெஸ்ட் போட்டி ஆகும்.

வாக்கர் யூனுஸ்

வாக்கர் யூனுஸ்

டெஸ்ட் போட்டியில் சச்சின் அடித்த முதல் பந்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வாக்கர் யூனுஸ் போட்டது.

கவாஸ்கரின் சாதனை

கவாஸ்கரின் சாதனை

சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் 34 சென்ச்சுரி அடித்தது தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சமன் செய்த சச்சின் அந்த தினத்திலேயே அதை முறியடித்து புதிய சாதனையும் படைத்தார்.

Story first published: Friday, October 11, 2013, 13:19 [IST]
Other articles published on Oct 11, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+