Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனி, யுவராஜ் சிங் திடீர் சந்திப்பு..!! எதற்கு தெரியுமா??

மொகாலி: இந்திய கிரிக்கெட் அணியின் தூண்களாக விளங்கியவர்கள் தோனி, யுவராஜ் சிங்..

Recommended Video

Dhoni Meets Yuvraj Singh; Insta Video Goes Viral | OneIndia Tamil

களத்திலும், வெளியிலும் நண்பர்களாக விளங்கி வந்த இந்த ஜோடிக்கு 2011ஆம் ஆண்டுக்கு பிறகு யுவராஜ் சிங்கின் தந்தையால் விரிசல் ஏற்பட்டு விட்டது.

தோனி திட்டமிட்டு, தனது மகனை அணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும், யுவராஜ் சிங்கிற்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு தோனி தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார்.

2வது இன்னிங்ஸ்

2வது இன்னிங்ஸ்

தோனிக்கு யுவராஜின் தந்தை சாபம் எல்லாம் விட்டார். தந்தை என்றால் மகனின் நண்பர்களை திட்டத்தானே செய்வார்கள். இருப்பினும், சில ஆண்டுகளுக்கு பிறகு தோனியுடனான யுவராஜ் சிங் நட்பு தொடர்ந்த வண்ணமே இருந்தது. தோனியும், யுவராஜ் சிங்கும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், யுவராஜ் சிங் தனது 2வது இன்னிங்சை தொடங்க உள்ளதாக ட்வீ ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்

பி.சி.சி.ஐ. விதி

பி.சி.சி.ஐ. விதி

இதனால் யுவராஜ் சிங் மீண்டும் ஓய்விலிருந்து வருகிறார் என்ற செய்திகள் வந்தன. ஆனால் பிசிசிஐ.யின் விதிப்படி இந்திய வீரர்கள் ஏவரேனும் வெளிநாட்டில் நடைபெறும் லீக் போட்டிகளில் பங்கேற்றால் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க முடியாது என்ற விதி உண்டு. இதனால் யுவராஜ் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரலான சந்திப்பு

வைரலான சந்திப்பு

இந்த நிலையில் யுவராஜ் சிங்கும், தோனியும் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என ரசிகர்கள் யோசித்த நிலையில், மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஒரு நபர் யுவராஜின் வீட்டு கதவை தட்டி பந்தை தூக்கி யுவராஜ் சிங்கிடம் எறிந்தார். அந்த நபரின் முகம் வீடியோவில் காட்டப்படவில்லை என்றாலும், தற்போது வைரலான சந்திப்பு புகைப்படத்தின் மூலம் வீடியோவில் வந்த நபர் தோனி தான் என்று தெளிவாகிறது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

யுவராஜ் சிங்கும், தோனியும் இணைந்து புதிய தொழில் தொடங்க உள்ளதாகவும் அதற்கான விளம்பரம் தான் இது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சிலர், இருவரும் இணைந்து கிரிக்கெட் பயிற்சி மையத்தை நாடு முழுவதும் தொடங்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். எதற்கு வேண்டுமானாலும் இருக்கட்டும், தோனியையும், யுவராஜையும் இப்படி ஒன்றாக பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருவரின் ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, December 7, 2021, 17:03 [IST]
Other articles published on Dec 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+