ஐபிஎல் கெயில், காம்பிர் கதி என்ன?
டெல்லி: ஐபிஎல் 11வது சீசனுக்காக அணிகள் வீரர்களை தக்க வைக்கும் உரிமையின் அடிப்படையில் பல மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், டி-20 ஜாம்பவான் கிறிஸ் கெயில், சிறந்த கேப்டன் கவுதம் காம்பிரை எந்த அணியும் கோராதது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்சரஸ் அணிக்காக விளையாடியுள்ள கிறிஸ் கெயில், ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக மட்டும் 91 போட்டிகளில் 3420 ரன்கள் எடுத்துள்ளார். 2012, 2013ல் அதிக ரன்கள் குவித்ததற்காக ஆரஞ்ச் கேப் வென்றார்.

5 சதங்கள், அதிகபட்சம், 175 நாட் அவுட், மிகவும் அதிகபட்சமாக 263 சிக்சர்கள் என, கெயிலின் சாதனைகள் அதிகம்.
ஆனால், கடந்த தொடரில், 9 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அரைசதம் கடந்தார்.
தற்போது நல்ல பா்ரமில் உள்ள அவர், வரும், 27ம் தேதி நடக்கும் ஏலத்தின்போது, வீரர்கள் ஏலத்தின்போது தக்க வைக்க வாய்ப்பு உள்ளது. அவர் முதல் முதலில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி அதன்பிறகே, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு வந்தார். அதனால், இந்த இரண்டு அணிகளில் எந்த அணிக்கு அவர் போகப் போகிறார் என்பதற்கு காத்திருக்க வேண்டும்.
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை சாம்பியன் கோப்பையை வென்று தந்த கவுதம் கம்பீரை தக்க வைக்காததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மொத்தம், 131 ஆட்டங்களில், 3634 ரன்கள் குவித்துள்ளார் 31 முறை அரை சதம் அடித்துள்ளார். மிகச் சிறந்த ஐபிஎல் கேப்டனாக கருதப்படுகிறார்.
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வருவதற்கு முன், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு அவர் விளையாடியதால், இரண்டில் எந்த அணிக்கு போகப் போகிறார் என்பது ஏலத்தின்போது தெரியும்.
Story first published: Friday, January 5, 2018, 15:58 [IST]
Other articles published on Jan 5, 2018


Click it and Unblock the Notifications