Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம்.. மொத்தம் 4 இந்தியர்கள் இடம்பெற்றனர்..!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்துள்ளது.

Recommended Video

IND vs SA | Victory at Centurion testament to India's all-round performance in Tests -Kohli

நடப்பாண்டில் டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கியவர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ள அணியில் ஒரே ஒரு ஆஸ்திரேலிய வீரர் மட்டுமே உள்ளனர். அதிகபட்சமாக 4 இந்தியர்கள் உள்ளனர்

முன்வரிசை வீரர்கள்

முன்வரிசை வீரர்கள்

தொடக்க வீரராக ரோகித் சர்மா தேர்வாகியுள்ளார். நடப்பாண்டில் 11 போட்டியில் விளையாடி ரோகித் 906 ரன்களை குவித்துள்ளார்.இதில் 2 சதம் 4 அரைசதம் அடங்கும். மற்றொரு தொடக்க வீரராக இலங்கை அணியின் கருணரத்னே இடம்பெற்றுள்ளார். அவர் நடப்பாண்டில் 902 ரன்களை சேர்த்துள்ளார். இந்த அணியில் ஒரே ஒரு ஆஸ்திரேலிய வீரராக லாபஸ்சேங் இடம்பெற்றுள்ளார். அவர் 5 போட்டிகளில் விளையாடி 526 ரன்களை தேர்வு செய்துள்ளார்

நடுவரிசை வீரர்கள்

நடுவரிசை வீரர்கள்

நடப்பாண்டில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 4வது வீரராக தேர்வாகியுள்ளார். அவர் நடப்பாண்டில் 1708 ரன்கள் அடித்துள்ளார்.நடுவரிசையில் 5வது வீரராக பாகிஸ்தான் அணியின் ஃபாவத் ஆலம் தேர்வாகியுள்ளார்.9 போட்டிகளில் களமிறங்கி 571 ரன்களை அவர் அடித்துள்ளார். 6வது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் தேர்வாகியுள்ளார். 12 போட்டியில் விளையாடி 748 ரன்களை அவர் விளாசியுள்ளார்

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

7வது வீரராக ஆல்ரவுண்டரான தமிழக வீரர் அஸ்வின் தேர்வாகியுள்ளார். அஸ்வின் நடப்பாண்டில் 54 விக்கெட்டும், 355 ரன்களையும் குவித்துள்ளார்.8வது வீரராக நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜெமிசன் இடம்பெற்றுள்ளார். அவர் 5 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 9வது வீரராக இந்தியாவின் அக்சர் பட்டேல் தேர்வாகியுள்ளார். 5 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்

ஏன் இல்லை?

ஏன் இல்லை?

10வது வீரராக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஹசன் அலி இடம்பெற்றுள்ளார். நடப்பாண்டில் அவர் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 11வது வீரராக ஷாகின் அஃபிரிடி 47 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். நடப்பாண்டில் ஆஸ்திரேலிய அணி மிக குறைந்த அளவிலேயே டெஸ்ட் போட்டி விளையாடியது. இதனால் பெரும்பாலான அந்த நாட்டு வீரர்கள் இடம்பெறவில்லை

Story first published: Friday, December 31, 2021, 16:29 [IST]
Other articles published on Dec 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+