Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2023 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் அணி அறிவிப்பு.. 6 இந்திய வீரர்களுக்கு இடம்.. ரோகித் கேப்டனாக தேர்வு

மும்பை : 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஆறு இந்திய வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றதால் இந்திய அணி பல ஒரு நாள் போட்டிகளில் இந்த தொடரில் விளையாடியது. மேலும் இந்திய அணி ஐசிசி உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை எந்த தோல்வியும் பெறாமல் மொத்தம் பத்து போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது.

2023 ICC odi team of the year is announced - Rohit sharma appointed as captain

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் அணிக்கான கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரோகித் சர்மா தொடக்க வீரராகவும் அவருக்கு ஜோடியாக இந்தியாவின் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று நம்பர் மூன்றாவது வீரராக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த விராட் கோலி நம்பர் நான்காவது வீரராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நம்பர் 5வது வீரராக உலகக் கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடிய டாரல் மிட்செல் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று நம்பர் ஆறாவது வீரராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹென்றிச் கிளாசென் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் செஞ்சூரியனில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 174 ரன்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. நம்பர் எட்டாவது வீரராக சுழற் பந்துவீச்சாளர் ஆடம் சம்பா சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் 2023 ஆம் ஆண்டு 38 ஒரு நாள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஒன்பதாவது வீரராக வேகபந்துவீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு சிராஜ் 44 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பத்தாவது வீரராக இந்தியாவின் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் 2023 ஆம் ஆண்டு 49 ஒரு நாள் விக்கெட்டுகளை சாய்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பர் 11-வது வீரராக இந்தியாவின் முகமது சமி சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

Story first published: Tuesday, January 23, 2024, 14:40 [IST]
Other articles published on Jan 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+