2023 ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் அணி அறிவிப்பு.. கோலி, ரோகித் இல்லை.. 2 இந்தியர்களுக்கு இடம்
மும்பை : 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. எனினும் இந்தியா கடந்த ஆண்டு பெரிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் சிறந்து விளையாடிய வீரர்களை ஐசிசி டெஸ்ட் அணியாக தேர்வு செய்துள்ளது.
இதில் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். எனினும் இதில் இந்திய வீரர்கள் வெறும் இரண்டு பேர் தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த பட்டியலில் தொடக்க வீரராக உஸ்மான் கவாஜா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

கவாஜா, 2023 ஆம் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1210 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதமும் ஆறு அரை சதமும் அடங்கும். இந்த பட்டியலில் இலங்கை அணி வீரர் கருணரத்னே இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இவர் 68 ரன்கள் அடித்திருக்கிறார். மூன்றாவது வீரராக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
நடப்பாண்டில் அவர் தொடர்ந்து மூன்று சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நான்காவது வீரராக இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் நியூஸிலாந்துக்கு எதிராக ஒரு சதம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சதம் அடித்திருந்தார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் பெற்றிருக்கிறார்.
இவர் 12 போட்டிகளில் 919 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று இருக்கிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஜடேஜா கடந்தாண்டு கலக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழாவது இடத்தில் விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கெரி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இவர் 2023 ஆம் ஆண்டு 54 டிஸ்மிசல் செய்து இருக்கிறார். 8வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 11 டெஸ்ட் போட்டிகளில் 42 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஒன்பதாம் இடத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டிருக்கிறார். அஸ்வின் பார்டர் கவாஸ்கர் தொடரில் நான்கு போட்டிகளில் களமிறங்கி 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் எதிராக முதல் டெஸ்டில் 12 விக்கெட்களும் இரண்டாவது டெஸ்டில் பேட்டிங்கில் 50 ரன்கள், பவுலிங்கில் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தார். பத்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு 38 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 11 வது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications