2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி.. 2 இந்தியர்களுக்கு இடம்.. ஆனால் அது கோலி, ரோகித் இல்லை
மும்பை : 2023 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியை ஹர்ஷா போக்லே வெளியிட்டு இருக்கிறார். இதில் யார் இடம் பெற்று இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்த அணியில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
ஆனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஹர்ஷா போக்லே இந்த அணியின் இடம் தரவில்லை. ஏனென்றால் இந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் எதிராக இரண்டு டெஸ்ட் ஆகிய தொடர்களில் தான் விளையாடியது.

இதேபோன்று இந்த ஆண்டு இந்தியா விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. நடப்பு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் அடித்த ஒரே வீரர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த உஸ்மான் கவாஜா என்பதால் அவர் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இதேபோன்று இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 606 ரன்களை அடித்து இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். மூன்றாவது வீரராக கேன் வில்லியம்சன் உள்ளார் அவர் இந்த ஆண்டு ஏழு டெஸ்ட் போட்டிக்கு விளையாடி 695 ரன்கள் அடித்திருக்கிறார். நான்காவது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இடம்பெற்றிருக்கிறார்.அவர் இந்த ஆண்டு 787 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதேபோன்று ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி புருக் இடம்பெற்றிருக்கிறார். இவர் 701 ரன்களை அடித்திருக்கிறார். 91 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் இருக்கிறது. ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ள அணியில் இரண்டு இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது வேறு யாருமில்லை ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் தான்.
இவர்கள் சுழற் பந்துவீச்சாளராக இடம்பெற்றிருக்கிறார்கள். அஸ்வின் நடப்பாண்டில் 150 ரன்களும் 41 விக்கெட்டுகளும் எடுத்திருக்க ஜடேஜா 281 ரன்கள் 33 விக்கெட் களையும் வீழ்த்தி இருக்கிறார். விக்கெட் கீப்பராக நியூசிலாந்து அணியின் டாம் ப்ளெண்டல் என்ற வீரரை ஹர்ஷா போக்லே தேர்வு செய்திருக்கிறார். இதேபோன்று மூன்று வேகப் பந்துவீச்சாளராக ஸ்டூவர்ட் பிராட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோரை ஹர்சா போக்லே தேர்வு செய்திருக்கிறார்.
Story first published: Friday, December 29, 2023, 21:27 [IST]
Other articles published on Dec 29, 2023


Click it and Unblock the Notifications