
அட்டவணை
புதிய அட்டவணை படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை விளையாடுகிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். இதே போன்று அரையிறுதி போட்டியை நடத்தாமல், எலிமினேட்டர் போட்டி நேரடியாக நடத்துகிறது.

நேரம்
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். மொத்தம் 4 முறை மதியம் போட்டி நடைபெறுகிறது. இதில் மதியம் 3.30 மணிக்கும், மாலை 7.30 மணிக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மார்ச் 17ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதியை தவிர மற்ற 2 நாட்களும் போட்டி நடைபெறுகின்றன.

முதல் போட்டி
டி20 உலககோப்பை போட்டிகள் முடிந்த 4 நாட்களில் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெறுகிறது. மார்ச் 4ஆம் தேதி முதல் போட்டியில் மும்பை அணியும், குஜராத்அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. வரும் 5ஆம் தேதி பெங்களூரு அணியும், டெல்லி அணயும் மோதுகின்றன. இதே போன்று மார்ச் 6ஆம் தேதி மும்பை, பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முக்கிய போட்டிகள்
மார்ச் 7ஆம் தேதி டெல்லி, உபி அணியும் 8ஆம் தேதி குஜராத் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடைசி லீக் ஆட்டத்தில் மார்ச் 21ஆம் தேதி பெங்களூருவும் மும்பையும், உபியும் டெல்லி கேபிட்டல் அணியும் மோதுகின்றன. மார்ச் 24ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும் 26ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











