Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2024ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது? ஐசிசி பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர்

மும்பை : ஐசிசி ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதை அறிவிக்கும் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் கேர்பில்ட் சோபர்ஸ் பெயரில் இந்த விருது வழங்கப்படும். 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் மொத்தம் நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இந்திய வீரர் பும்ராவும் ஒருவராக இருக்கின்றார். இந்த பட்டியலில் போட்டி போடும் மற்ற வீரர்கள் யார்? அவர்கள் இந்த ஆண்டு என்ன சாதனைகள் செய்திருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்.

year ender 2024 jasprit bumrah travis head

அவர் 12 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 1100 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 55.அதுமட்டுமல்லாமல் அதிகபட்சமாக 317 ரன்கள் அவர் குவித்திருக்கிறார். முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 322 பந்துகளில் இந்த சாதனையை அவர் செய்தார். ஜோ ரூட்டுடன் இணைந்து 451 ரன்கள் அவர் சேர்த்தார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா.

நடப்பாண்டில் 13 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். இதில் அவருடைய பந்துவீச்சு சராசரி வெறும் 14 ஆகும். அதுமட்டுமல்லாமல் எட்டு டி20 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மேலும் இந்திய அணி t20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். பெர்த் டெஸ்ட் போட்டியில் கேப்டனாகவும் செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். நடப்பாண்டில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1556 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 55.அதிகபட்ச ஸ்கோர் 262 ரன்கள் ஆகும். நடப்பாண்டில் ஆயிரம் ரன்கள் மேல் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து முறை ஆண்டுக்கு ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் டெஸ்டில் தற்போது ஜோ ரூட் 36 சதம் அடித்திருக்கிறார். 6 சதம்,ஐந்து அரை சதம் என நடப்பாண்டில் ஜோரூட் பட்டையை கிளப்பி இருக்கிறார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 608 ரன்கள் அடித்திருக்கும் ஹெட் அதிகபட்சமாக 152 ரன்கள் குவித்தார்.

மேலும் 15 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 539 ரன்கள் குவித்து இருக்கிறார். நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய ஐசிசியின் இணையதளத்திற்கு சென்று ரசிகர்கள் வீரர்களுக்கு வாக்களிக்கலாம்.

Story first published: Tuesday, December 31, 2024, 7:12 [IST]
Other articles published on Dec 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+