2வது டெஸ்ட்-இந்தியா 201க்கு ஆல் அவுட்- விக்கெட்களை இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்

முதல் டெஸ்ட் போட்டியை அபாரமாக வென்ற இந்தியா தற்போது தொடரை வெல்லும் நோக்குடன் 2வது டெஸ்ட் போட்டியில் நுழைந்துள்ளது. பார்படோஸில் தொடங்கியுள்ள இப்போட்டியில் முதல் இன்னிங்ஸை இந்தியா தடுமாற்றத்துடன் முடித்துள்ளது. வழக்கம் போல தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பவே, இந்தியாவின் நிலை சிக்கலானது. இருப்பினும் வி.வி.எஸ்.லட்சுமணும், சுரேஷ் ரெய்னாவும் சற்று நிலைத்து ஆடி அணியை ஸ்திரப்படுத்தினர்.
லட்சுமண் 85 ரன்களைக் குவித்தார். சுரேஷ் ரெய்னா 53 ரன்களைச் சேர்த்தார். இந்த நிலையில் 201 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஆல் அவுட் ஆகி விட்டது. லட்சுமணும், ரெய்னாவும் சேர்ந்து 5 வது விக்கெட்டுக்கு 117 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தனர்.
பின்னர் ஆட வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 30 ரன்களை எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்களை இழந்து விட்டனர்.
இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் தொடரை வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, June 1, 2012, 17:15 [IST]
Other articles published on Jun 1, 2012


Click it and Unblock the Notifications