Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்த 3 விஷயத்தை எப்படி மறந்தார்கள்” 2வது டி20ல் இந்தியா செய்ய வேண்டிய மாற்றம்..இல்லைனா அவ்வளவுதான்

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுடனான 2வது டி20 போட்டிக்குள் இந்திய அணி 3 பெரும் விஷயங்களை சரிசெய்தே தீர வேண்டிய சூழலில் உள்ளது.

Recommended Video

IND vs AUS: Kohli முதல் Axar வரை; Press Meet-ல் Rohit-ன் Comments

மொஹாலியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

இந்த போட்டியில் 208 ரன்களை அடித்தும் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா

இனி வெற்றி வேண்டுமென்றால் இந்திய அணி இனி 3 விஷயங்களை மாற்றியே தீர வேண்டும். அதில் முதல் விஷயம் வேகப்பந்துவீச்சு. ஆசிய கோப்பை தொடர் முதல் தற்போது வரை வேகப்பந்துவீச்சு சற்று மோசமாக உள்ளது. டெத் ஓவர்களில் புவனேஷ்வர் குமார் தடுமாறுவது நன்றாக தெரிகிறது. ஹர்ஷல் பட்டேலும் சோபிக்கவில்லை. எனவே ஜஸ்பிரித் பும்ரா வந்தால் மட்டுமே தான் அணிக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும்.

சாஹல்

சாஹல்

இந்திய அணியின் 2வது தலைவலி யுவேந்திர சாஹல். அணியின் முதன்மை ஸ்பின்னராக உள்ள சாஹல் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. ஐபிஎல்-க்கு பிறகு அவர் ஆடிய சர்வதேச 12 போட்டிகளிலும் அவரின் எகானமி 8+ ரன்களாக உள்ளது. கடந்த 5 போட்டிகளை எடுத்துக்கொண்டால் 0/32, 0/18, 1/43, 3/34, and 1/42 என நிலையில்லாமல் உள்ளது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3வது பிரச்சினை

3வது பிரச்சினை

தினேஷ் கார்த்திக் தான் 3வது பிரச்சினை. கடைசி சில ஓவர்களில் தினேஷ் கார்த்திக் தேவை என்பதற்காக தான் பண்ட்-ஐ ஓரம்கட்டினர். ஆனால் அவருக்கு முன்னதாக ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேலை களமிறக்கினர். இதனால் தினேஷ் கார்த்திக் சிறிது நேரம் கூட களத்தை பற்றி தெரிந்துக்கொள்ள முடியாமல் போகிறது. எனவே தினேஷ் கார்த்திக்-ஐ இனி முன்கூட்டியே களமிறக்க வேண்டியுள்ளது.

2வது டி20 போட்டி

2வது டி20 போட்டி

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி வரும் செப்டம்பர் 23ம் தேதி இரவு நடைபெறுகிறது. இந்த போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்திலும் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் மேற்கூறிய 3 மாற்றங்களையும் ரோகித் சர்மா செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Story first published: Wednesday, September 21, 2022, 20:29 [IST]
Other articles published on Sep 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+