For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் முன் உள்ள 3 முக்கிய குழப்பங்கள்.. உலகக்கோப்பை திட்டம் செயல்படுத்தப்படுமா.. என்ன செய்வார்??

ஐதராபாத்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் 3 பெரும் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலில் கேப்டன் ரோகித் சர்மா தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. இந்த தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளன.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் ஐதராபாத்தில் உள்ள ராஜாஜி மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

3 குழப்பங்கள்

3 குழப்பங்கள்

இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11ல் ஓப்பனிங்கிலேயே சிக்கல் உண்டாகியுள்ளது. விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் திருமணம் காரணமாக விலகிவிட்டார். அவரின் இடத்தை நிரப்புவதற்கு இஷான் கிஷான் தான் உள்ளார். ஆனால் இவர் ஓப்பனிங் வீரர் ஆகும். இவரை ஓப்பனிங்கிற்கு சேர்த்தால் சுப்மன் கில் நீக்கப்பட வேண்டும், இல்லையென்றால் மிடில் ஆர்டருக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும். இதில் ரோகித் எதை செய்வார் எனத்தெரியவில்லை.

2 ஸ்பின்னர்கள்

2 ஸ்பின்னர்கள்

சுழற்பந்துவீச்சு துறையில் ஒரு இடத்தை அக்‌ஷர் பட்டேல் ஏற்கனவே உறுதி செய்துவிட்டார். மற்றொரு இடத்திற்காக தான் தற்போது யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் போட்டிப்போட்டு வருகின்றனர். சாஹலுக்கு காயம் ஏற்பட்டு குணமடைந்து வருகிறார். மறுபுறம் குல்தீப் யாதவ் இலங்கை தொடரில் அபாரமாக செயல்பட்டார். ஒருவேளை சாஹல் உடற்தகுதி பெற்றுவிட்டால் யாரை சேர்ப்பது என்ற குழப்பம் ஏற்படலாம்.

 சுந்தருக்கான வாய்ப்பு

சுந்தருக்கான வாய்ப்பு

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சுந்தர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். உலகக்கோப்பை திட்டத்தில் சுந்தரும் இருக்கிறார் என்று கூறப்படுவதால், அவருக்கான ஆல்ரவுண்டர் வாய்பை இந்த முறை கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தரவரிசை

தரவரிசை

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் நியூசிலாந்து அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியோ 110 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால் இந்திய அணி மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 17, 2023, 17:33 [IST]
Other articles published on Jan 17, 2023
English summary
3 major decisions in front of Captain rohit sharma ahead of India vs new zealand ODI series, here is the full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+