இப்படி ஒரு சோதனையா.. டிராவிட் எதிரே உள்ள 3 பெரும் பிரச்சினைகள்.. இங்கி, அணியை சமாளிப்பது கடினம்தான்!
இப்படி ஒரு சோதனையா.. டிராவிட் எதிரே உள்ள 3 பெரும் பிரச்சினைகள்.. இங்கி, அணியை சமாளிப்பது கடினம்தான்!
Recommended Video
பிர்மிங்கம்: இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியில் இன்னும் 3 பெரிய குழப்பங்கள் உள்ளன.
இரு அணிகளும் மோதும் 5வது டெஸ்ட் போட்டி நாளை மதியம் 3.30 மணிக்கு பிர்மிங்கம் நகரில் நடைபெறவுள்ளது.
இதற்காக இங்கிலாந்து அணி இறுதி செய்யப்பட்டு தயாராக உள்ள சூழலில் இந்திய அணியில் மட்டும் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. இதற்கு காரணம் 3 விஷயங்கள் தான்.

ரோகித் சர்மா விவகாரம்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுகிறாரா? இல்லையா ? என்பதற்கு இன்னும் பதில் கொடுக்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் இன்னும் போட்டியில் இருந்து விலகவில்லை என ராகுல் டிராவிட் கூறியுள்ளதால், குழப்பம் அதிகரித்துள்ளது. ஒருவேளை ரோகித் ஆடவில்லை என்றால் கேப்டன்சி மற்றும் ஓப்பனிங் இடம் என 2 பிரச்சினைகள் உருவாகும்.

2வது பிரச்சினை என்ன
ரோகித் சர்மாவால் விளையாட முடியாமல் போனால் இந்த போட்டிக்கு ஜஸ்பிரித் பும்ரா தான் கேப்டனாக அறிவிக்கப்படுவார். ஆனால் அது அறிவிக்கப்படாததால், பும்ராவும் குழப்பத்தில் உள்ளார். பவுலிங்கிற்கு வியூகம் வகுத்து வரும் அவருக்கு, கேப்டன்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் சிறிது கால அவகாசம் தேவை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பவுலிங் படை
3வதாக ப்ளேயிங் 11-ஐ முடிவு செய்வது தான் பெரிய பிரச்சினையே. ரோகித் சர்மா இல்லாததால் ஓப்பனிங்கிற்கு மயங்க் அகர்வால் ஆடுவாரா அல்லது கே.எஸ். பரத் ஆடுவாரா என்ற குழப்பம் உள்ளது. ஒருவேளை புஜாரா - ஹனுமா விஹாரி ஆகியோரில் ஒருவர் கூட ஆடலாம். இதே போல பவுலிங்கிலும் 2 ஸ்பின்னர்களை பயன்படுத்துவார்களா அல்லது 4 வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு ஸ்பின்னர் என காம்போவை பயன்படுத்துவார்களா என்பது தெரியவில்லை.

விடை எப்போது?
போட்டி நாளை மதியம் 3.30 மணிக்கு தொடங்கவுள்ள சூழலில் இன்று இரவு 8 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. அதில் ரோகித் சர்மாவின் உடல்நலம் எப்படி உள்ளது? அவர் விளையாடுகிறாரா இல்லையா? ப்ளேயிங் 11 எப்படி அமையும் என குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications