
முதல் டி20 ஆட்டம்
இந்த போட்டிக்கான இந்திய அணி தீவிரமாக பயிற்சி பெற்று வந்த சூழலில் நேற்று திடீர் மாற்றங்கள் ஏற்பட்டது. இந்திய அணியின் கேப்டனும் கே.எல்.ராகுலுக்கு பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒட்டுமொத்த தொடரில் இருந்தே வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல குல்தீப் யாதவும் காயத்தினால் வெளியேறியுள்ளார்.

ஓப்பனிங்கில் யார்
இந்த காரணத்தால் ஓப்பனிங்கில் இளம் வீரர்களான இஷான் கிஷான் மற்றும் ருதுராஜ் கெயிக்வாட் களமிறங்கவுள்ளனர். நீண்ட நாட்களாக வாய்ப்பு இன்றி இருந்த ருதுராஜ், இந்த தொடரை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் இஷான் கிஷான் முதல் விக்கெட்டிற்கு களமிறங்குகிறார். 2வது விக்கெட்டிற்கு ரிஷப் பண்ட் ஆடவுள்ளதாக தெரிகிறது.

சீனியர்களின் இடம்
டாப் ஆர்டர் முழுவதும் இளம் வீரர்கள் களமிறங்குவதால் லோயர் ஆர்டரில் அணிக்கு உதவ நிச்சயம் சீனியர் வீரர்கள் தேவை. எனவே ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் என இருவருமே ப்ளேயிங் 11ல் வாய்ப்பு பெறவுள்ளனர். ஆனால் யார் எந்த ஆர்டரில் ஆடுவார்கள் என்பது ஆட்டத்தை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலிங் குழு
பந்துவீச்சை பொறுத்தவரையில் இந்த களத்தில் ஸ்பின்னர்கள் முக்கியம். குல்தீப் யாதவ் இல்லாததால், அக்ஷர் பட்டேல் மற்றும் யுவேந்திர சாஹல் ஜோடி சேரலாம். வேகப்பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல் டெத் ஓவர் பவுலராக இருப்பார். சீனியர் பவுலர் தேவை என்பதால் புவனேஷ்வர் குமார் இடம்பெறவுள்ளார். மற்றொரு இடத்திற்கு உம்ரான் மாலிக் உள்ள போதும், ஆவேஷ் கான் தான் சரியான ஃபார்மில் இருப்பதாக கூறப்படுகிறது.

ப்ளேயிங் 11 கணிப்பு
ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், யுவேந்திர சாஹல், ஆவேஷ் கான்


Click it and Unblock the Notifications