For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 முக்கிய சவால்கள்.. சிஎஸ்கே புதிய கேப்டன் ஜடேஜாவுக்கு ஓப்பனிங்கே ஆப்பு..எப்படி சமாளிக்கப்போகிறார்??

மும்பை: சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜடேஜாவுக்கு எதிராக 3 முக்கிய சவால்கள் காத்துள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.தோனி நேற்று விலகினார். புதிய கேப்டனாக ஜடேஜா அறிவிக்கப்பட்டார்.

மெகா ஏலம் முடிந்து, பல மாற்றங்களுடன் வந்துள்ள இந்த அணியில் புது கேப்டன் ஜடேஜாவுக்கு 3 முக்கிய சவால்கள் உள்ளன.

முதல் சவால் என்ன

முதல் சவால் என்ன

கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியின் பவுலிங்கை தோனி பக்காவாக வைத்திருந்தார். அதற்கு காரணம் தீபக் சஹார் மற்றும் ஷர்துல் தாக்கூர். ஆனால் தற்போது அவர்கள் இருவருமே இல்லை. சஹார் தொடரின் 2வது பாதியில் வந்துவிடுவார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதல் பாதி தொடரை எந்த பவுலர்களை வைத்து சரிகட்ட போகிறோம் என்ற பரபரப்பு ஜடேஜாவிடம் இருக்கும்.

மிக முக்கிய சவால்

மிக முக்கிய சவால்

தோனி தற்போது அணியின் சாதாரண பேட்ஸ்மேன் ஆகிவிட்டார். ஃபார்ம் அவுட்டாகியுள்ள அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஜடேஜாவுக்கு இருக்கும். ஆனால் இதனால் களத்தில் சில யோசனைகள் கிடைக்காது. மற்றும் ரசிகர்களும் கொந்தளிப்பார்கள். மற்றொரு புறம் ஜகதீசன் போன்ற அடுத்த விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பு தந்து வளர்த்துவிட வேண்டிய பொறுப்பும் ஜடேஜாவுக்கு உள்ளது. இதனை எப்படி கையாளப்போகிறார் என்பதை பார்க்க வேண்டும்.

சிஎஸ்கேவின் மந்திரம்

சிஎஸ்கேவின் மந்திரம்

இத்தனை ஆண்டுகளாக சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, வீரர்களின் பணிச்சுமையை கட்டுப்படுத்துவது தான். தற்போது ருதுராஜ், மொயீன் அலி, ஜடேஜா, அம்பத்தி ராயுடு என அணியின் தூணாக இருக்கக்கூடிய வீரர்களுக்கு, இடையில் ஓய்வுகள் தர வேண்டும். ஆனால் வெற்றியை அது பாதிக்கக்கூடாது. இதனை புதிய கேப்டன் ஜடேஜா எப்படி சமாளிக்கிறார் என்று பார்க்கலாம்.

Recommended Video

IPL 2022: CSK Share Ravindra Jadeja's First Reactions After Being Appointed Captain
தோனியின் ஐடியா

தோனியின் ஐடியா

இதுபோன்ற பல விஷயங்களை ஜடேஜாவுக்காக தோனி விட்டுச் சென்றுள்ளார். எனினும், அவற்றினை சமாளிக்க தோனியே இன்னும் 2 ஆண்டுகள் அணியில் இருந்து ஜடேஜாவுக்கு உதவவிருக்கிறார். ப்ளேயிங் 11ல் வாய்ப்பு பெறவில்லை என்றாலும், வெளியில் இருந்து ஜட்டுவுக்கு ஆலோசனை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, March 25, 2022, 13:45 [IST]
Other articles published on Mar 25, 2022
English summary
CSk new captain Ravindra jadeja have to face 3 Important challenges in IPL 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+