Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் வீரருக்கு திடீர் 'கிராக்கி' .. 3 ஐபிஎல் அணிகள் வாங்க ரெடி - தோனி வைக்கும் குறி

மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை ஏலத்தில் எடுக்க மூன்று ஐபிஎல் தயாராக உள்ளன என்றால் நம்பமுடிகிறதா?

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் கடந்த 2020ம் ஆண்டு, டிசம்பர் மாதம் தீடீரென தனது ஓய்வை அறிவித்தார். 29 வயதே ஆகும் அமீரின் ஓய்வு ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முகமது அமீர் தற்போது குடும்பத்தினருடன் தற்போது இங்கிலாந்தில் தங்கியுள்ளார். அவரது மனைவி இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதால், தான் இங்கிலாந்து குடியுரிமை பெறவுள்ளதாகவும், அடுத்த 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்பதால், இங்கிலாந்து உள்நாட்டு அணியில் கிரிக்கெட் விளையாட விரும்புவதாகவும் அமீர் தெரிவித்தார்.

 இரண்டாவது வீரர்

இரண்டாவது வீரர்

இந்த சூழலில், அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரின் 2வது சீசன் முதல் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த அசார் முஹ்மூத் மட்டுமே ஐபிஎல்-ல் பங்கேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு விளையாடியுள்ளார். அப்போதும் கூட அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் தான் பங்கேற்றார்.

 தோனி விரும்பும் ஸ்விங்

தோனி விரும்பும் ஸ்விங்

இந்த அந்நிலையில், அவர் 2022 ஐபிஎல்-ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால், அவரை ஏலத்தில் எடுக்கமூன்று அணிகள் தயாராக உள்ளன. இதில், முதல் அணியாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். கடந்த 2018 முதலேயே, சரியான வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர் கிடைக்காமல் அல்லாடி வருகிறது. லுங்கி ங்கிடி மீது பெரிய நம்பிக்கை வைத்து அவரை ஏலத்தில் எடுத்தில் தோனிக்கு அதிக பங்கு உள்ளது. ஆனால், அவரது பெர்ஃபாமன்ஸ் இதுவரை சிறப்பாக அமையவில்லை. அவ்வப்போது விக்கெட்டுகள் எடுத்ததாலும், அவரால் பவுலிங்கில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. குறிப்பாக, டெத் ஓவர்களில் சரமாரியாக சிக்ஸர்களை வாரி வழங்குகிறார். ஸோ, அமீர் அந்த இடத்திற்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம். இன்றைய தேதியில், உலகின் பெஸ்ட் ஸ்விங் பவுலர்களில் முதல் மூன்று இடங்களில் இருப்பவர் அமீர். இவரை அணியில் எடுப்பதன் மூலம், தீபக் சாஹர் - அமீர் கொண்டு ஸ்விங் பவுலிங்கில் அட்டகாசம் புரியலாம். ஸ்விங் மட்டுமின்றி, வேகமும் இவரது பவுலிங்கில் இருப்பது கூடுதல் பிளஸ். ஸோ, தோனியின் ஆப்ஷனாக அமீர் இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இருக்க முடியாது.

 ஆர்சிபி வளைத்துப் போடுமா?

ஆர்சிபி வளைத்துப் போடுமா?

இரண்டாவது அணி ஆர்சிபி. 2021 சீசனுக்கான ஏலத்தின் போது, மூச்சைப் போட்டு 15 கோடிக்கும் ஏலத்தில் எடுத்த, நியூசிலாந்தில் கைலே ஜேமிசனால், இந்த சீசனில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு பவுலர் அணியில் இருக்கிறாரா என்றே தேட வேண்டியிருந்தது. டெத் பவுலிங்கிலும் ஒன்றுமில்லை. ஏற்கனவே, சில வருடங்களுக்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது, அமீருக்கு 'பேட்' பரிசாக கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியவர் விராட் கோலி. ஸோ, அவரது ஆப்ஷனில் அமீருக்கு நிச்சயம் இடமிருக்கலாம்.

 புத்துணர்ச்சி கிடைக்குமா?

புத்துணர்ச்சி கிடைக்குமா?

மூன்றாவது அணி கேகேஆர். பேட் கம்மின்ஸ் தவிர்த்து சொல்லிக் கொள்ளும்படி ஃபாஸ்ட் பவுலிங் இல்லை. அவரையே அந்த அணி அதிகம் நம்பியிருக்கிறது. அது கம்மின்ஸ்ஸுக்கு மேலும் பாரத்தை கூட்ட, அவரால் கூட சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஏற்கனவே தொடர் தோல்விகளில் சிக்கித் தவிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, முகமது அமீரின் வருகை புத்துணர்ச்சியை ஏற்படுத்தலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!.

Story first published: Friday, May 21, 2021, 17:21 [IST]
Other articles published on May 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+