Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 இடதுகை ஸ்பின்னர்கள்.. அரையிறுதி வரைக்கும் போகலாம்.. இந்திய உலகக்கோப்பை அணியில் உள்ள ஓட்டைகள்!

மும்பை: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஸ்பின்னர்களும் இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களாக இருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட அணியை 30 நாட்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதற்கேற்ப அனைத்து நாடுகளும் அணிகளை அறிவித்துள்ளன. இந்த அணியில் மாற்றம் செய்வதற்கு செப்.28ஆம் தேதி கடைசி நாளாகும்.

3 left arm spinners and two of those with the same skill set in the Indian team for the ICC World Cup 2023

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஆசியக் கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட 18 வீரர்களில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை தவிர்த்து அனைத்து வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அஸ்வின், சாஹல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விடுபட்டது பேசுபொருளாகியுள்ளது.

ஏனென்றால் ஒருவருமே கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடிய வீரர்கள். இந்த ஓராண்டில் குல்தீப் யாதவ் எழுச்சி பெற்றாலும், இந்திய அணியில் விரல் ஸ்பின்னர்கள் இல்லாதது பேசுபொருளாகியுள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளில் ஏராளமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தும் அஸ்வின் தேர்வு செய்யப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் மூவரும் இடதுகை ஸ்பின்னர்களாக இருக்கிறார்கள். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்று ரசிகர்கள் குமுறினால், 3 இடதுகை ஸ்பின்னர்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. அதேபோல் ஆஃப் ஸ்பின்னர்கள் வேண்டுமென்றால், இடதுகை ஸ்பின்னர்களை இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பேக் அப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ், பேட்ஸ்மேனாக மட்டுமே இருப்பதும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இஷான் கிஷன் தொடக்க வீரர், விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டரிலும் ஆடக் கூடிய வீரர் என்று ஏராளமான ரோல்களை செய்வார். அதனால் இஷான் கிஷன் சரியான மாற்று வீரராக இருப்பார். ஆனால் சூர்யகுமார் யாதவால் பேட்டிங்கை கடந்து எந்த ரோலையும் செய்ய முடியாது.

ஒரே போல் விளையாடியக் கூடிய ஜடேஜா மற்றும் அக்சர் படேலை தேர்வு செய்ததும், சூர்யகுமார் யாதவை தேர்வு செய்ததுமே இந்திய அணியின் பின்னடையாக உள்ளது. ஏனென்றால் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் பந்துவீசக் கூடியவர் வீரர்கள். இதில் சூர்யகுமார் யாதவ் அல்லது அக்சர் படேல் இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் அஸ்வின் மற்றும் சாஹல் இருவரில் ஒருவரை தேர்வு செய்திருக்கலாம்.

இதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலின் ஆட்டத்தை பார்க்காமலேயே நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை போல் அரையிறுதி வரை இந்திய அணி முன்னேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, September 6, 2023, 14:57 [IST]
Other articles published on Sep 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+