Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. வெறும் 5 பேட்ஸ்மேன் தானா ? பும்ராவுக்கு பதில் யார்?

இந்தூர் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெறும் 5 பேட்ஸ்மேன்களுடன் மட்டும் களமிறங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்ற நிலையில், விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் 60 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்த ஆர்ஸ்தீப் சிங் இன்றைய போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஆடுகளம்

ஆடுகளம்

இந்தூர் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் ஆகும். இந்திய அணியின் பந்துவீச்சும் மோசமாக இருப்பதால், இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ஆடுகளத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ரன் குவிப்புக்கு ஏற்ற ஆடுகளம் என்பதால், நாங்கள் எந்த இலக்கை துரத்த உள்ளோம் என்று எங்களுக்கு தற்போது தெரிந்துவிடும்.

3 மாற்றம்

3 மாற்றம்

இன்றைய ஆட்டத்தில் நாங்கள் 3 மாற்றத்தை செய்துள்ளோம். கோலி, ரோகித்துக்கு ஓய்வு வழங்கிய நிலையில், ஆர்ஸ்தீப் சிங்கிற்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பயப்படும் மாதிரி ஏதும் இல்லை. ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாட வில்லை. ஸ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் என 3 பேர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பெவுமா கருத்து

பெவுமா கருத்து

இதனைத் தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா, இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இன்றைய போட்டியில் இன்று ரன் குவித்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். அணி என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். எங்களது அணியின் நோக்கியாவுக்கு பதில் பிரிட்டோரியஸ் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா 2, ரிஷப் பண்ட், 3, சூர்யகுமார் யாதவ், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, தினேஷ் கார்த்திக், 6, அக்சர் பட்டேல், 7,தீபக் சாஹர், 8, அஸ்வின், 9, முகமது சிராஜ், 10, ஹர்சல் படடேல், 11,உமேஷ் யாதவ்

Story first published: Tuesday, October 4, 2022, 19:21 [IST]
Other articles published on Oct 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+