Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் மைல்கல்லை எட்டும் தோனி.. CSK Vs KKR ஆட்டத்தில் படைக்கப் போகும் 3 சாதனைகள்

கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் நடப்பு சீசனில் ஹட்ரிக் வெற்றியைப் பெற்ற மூன்றாவது அணி என்ற பெருமையும் சிஎஸ்கேவுக்கு சேரும்.

இந்த நிலையில் கொல்கத்தா சிஎஸ்கே அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் 3 மைல்கல் எட்டப்பட வாய்ப்பு இருக்கிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக ரஹானே விளங்கி வருகிறார்.

3 Major Milestone might reached today csk vs kkr match

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜொலித்து வருகிறார். தற்போது வரை ரஹானே டி20 கிரிக்கெட்டில் 5,778 ரன்கள் அடித்து இருக்கிறார். இதில் 598 பவுண்டரிகள் அடங்கும். இதனால் இன்றைய ஆட்டத்தில் இரண்டு பவுண்டரிகளை அவர் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 600 பவுண்டர்களை தொட்ட வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இதேபோன்று கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக நிதிஷ் ரானா விளங்குகிறார். ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியையும் மீட்டு வருகிறார். இந்த நிலையில் கே கே ஆர் அணிக்காக ராணா 76 இன்னிங்ஸில் 1898ல் அடித்திருக்கிறார். இதில் 96 சிக்ஸர்கள் அடங்கும். இதனால் இன்றைய ஆட்டத்தில் நான்கு சிக்சர்களை அடித்தால் கே கே ஆர் அணிக்காக 100 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இதற்கு முன் ஆண்டிரு ரஸில் 179 சிக்சர் அடித்தது அதிகமாகும். இதைப் போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 4500 ரன்கள் என்ற மைல் கல்லை எட்ட உள்ளார். இன்றைய ஆட்டத்தில் 37 ரன்களை தோனி அடித்தால் இந்த சாதனையை நிகழ்த்தி விடலாம்.

சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரெய்னா 4687 ரன்கள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். தோனி இந்த சீசனில் கடைசி இடத்தில் களமிறங்குகிறார். கொஞ்சம் விரைவாக களம் இறங்கினால் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

Story first published: Sunday, April 23, 2023, 18:36 [IST]
Other articles published on Apr 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+