மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 49 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணில் மும்பையை கடைசியாக 2010 ஆம் ஆண்டு தான் வீழ்த்தி இருக்கிறது.
அதன் பிறகு நடைபெற்ற அனைத்து ஆட்டங்களிலும் சேப்பாக்கத்தில் மும்பையே வெற்றி கொடி காட்டி இருக்கிறது. மும்பை அணி சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் என்றால் அது போராடும் ஹர்திக் பாண்டியாவும் மலிங்காவும் தான்.

இந்த மூன்று வீரர்கள் இருந்தபோது சிஎஸ்கே அணியால் மும்பை அணியை தொட்டு கூட பார்க்க முடியவில்லை. பொலார்ட் சுழற் பந்துவீச்சை அபாரமாக விளையாடி சிக்ஸர்களை அடிக்கக் கூடிய வீரர். மேலும் பில்டிங் மூலமே ஒரு முறை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே வை வீழ்த்தினார். இதேபோன்று ஹர்திக் பாண்டியா ஒரு முறை தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தினார்.
மலிங்கா பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. இந்த நிலையில் இந்த மூன்று வீரர்களும் இல்லாமல் சி எஸ் கே வை மும்பை இந்தியன்ஸ் முதன்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இப்போதாவது சிஎஸ்கே அணி பழிவாங்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். மும்பை அணி பேட்டிங்கில் வலு நிறைந்ததாக இருக்கிறது.

கடைசியாக அவர்கள் விளையாடிய இரண்டு ஆட்டத்திலும் 200 ரன்களை எளிதாக துரத்தி விட்டார்கள். இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்றால் சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்ய வேண்டும். மும்பை அணி நிர்ணயிக்கும் இலக்கை சிஎஸ்கே அணி எளிதில் வென்றுவிட முடியும். மேலும் மழை ஆபத்து வேறு சென்னையை சூழ்ந்திருப்பதால் இன்றைய ஆட்டம் முழுமையாக நடைபெறுமா என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.