Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC WTC Final 2023 - இந்திய அணி வெற்றி வாய்ப்புக்கு 3 காரணங்கள்..ரோகித் படையின் பிளஸ் பாயிண்ட் என்ன?

லண்டன் : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா கைப்பற்ற தொடர்ந்து இரண்டாவது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவை இந்திய அணி இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.

இதில் இந்திய அணி வெற்றி பெற இருக்கும் மூன்று முக்கிய வாய்ப்புகள் குறித்து பார்ப்போம். லண்டன் ஓவல் மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை ஒப்பிட்டு பார்த்தால் லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்கள்.

3 Reason for the indian team to win icc world test championship

மேலும் கடந்த முறை இந்தியா இங்கு விளையாடிய போது வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் சுழற்பந்து வீச்சு ஓரளவுக்கு எடுபட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்தால் அதற்கான வாய்ப்பு குறைவுதான். இதனால் அஸ்வின் ஜடேஜா ஆகியோரின் பங்களிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இதேபோன்று இந்திய அணி வெற்றி பெற இரண்டாவது காரணமாக இருக்கப் போவது வேகப்பந்துவீச்சு தான். ஒரு காலத்தில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறுவார்கள். இதனால் இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர்களையும் நம்பி இருந்தது. ஆனால் தற்போது திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். முகமது சிராஜ், முஹம்மது சமி, உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாட்கட், ஷர்துல் தாக்கூர் என பல வீரர்கள் இருக்கிறார்கள். இது இந்திய அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.

எனினும் பும்ரா இல்லாதது மைனஸ் பாயிண்டாக இருந்தாலும், சமி, சிராஜ் ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று இந்தியாவின் பேட்டிங்கையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி சுப்மன் கில் செம பார்மில் இருக்கிறார்.

இதேபோன்று சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் விராட் கோலியும் அனுபவி வீர ரஹானேவும் இருப்பது இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. புஜாராவும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உடையவராக இருக்கிறார். இது அனைத்தும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Tuesday, June 6, 2023, 13:50 [IST]
Other articles published on Jun 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+