Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏமாற்றமடைந்த 3 இளம் வீரர்கள்.. 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்.. ப்ளேயிங் 11 விவரம் இதோ!

ஹராரே: ஜிம்பாப்வே உடனான 3வது ஒருநாள் போட்டியில் 2 முக்கிய மாற்றங்களை இந்திய அணி செய்துள்ளது.

Recommended Video

IND vs ZIM இந்திய வீரர் Shubman Gill சதம் அடித்து அசத்தல் *Cricket

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்ற நிலையில் 3வது போட்டி இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

3வது போட்டி

3வது போட்டி

கடைசி போட்டி என்பதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளனர். ஓப்பனிங்கில் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்குகின்றனர். முதல் விக்கெட்டிற்கு சுப்மன் கில், 2வது விக்கெட்டிற்கு இஷான் கிஷான் ஆகியோர் விளையாடவுள்ளனர். மிடில் ஆர்டரில் வழக்கம் போல சஞ்சு சாம்சன் மற்றும் தீபக் ஹூடா வாய்ப்பு பெற்றுள்ளனர்.

ஏமாந்த இளம் வீரர்கள்

ஏமாந்த இளம் வீரர்கள்

ஏதாவது ஒரு போட்டியிலாவது வாய்ப்பில் கிடைக்குமா என காத்திருந்த இளம் வீரர்கள் ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெயிக்வாட், சபாஷ் அகமது போன்ற வீரர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தொடரை கைப்பற்றியவுடனாவது இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என வல்லுநர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

2 மாற்றங்கள்

2 மாற்றங்கள்

பந்துவீச்சை பொறுத்தவரையில் 2 முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக தீபக் சஹார் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதில் தீபக் சஹார் ஆசிய கோப்பை அணியிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ஷிகர் தவான், கே.எல்.ராகுல் சுப்மன் கில், இஷான் கிஷான், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்‌ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான்

Story first published: Monday, August 22, 2022, 12:40 [IST]
Other articles published on Aug 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+