இவர் மனுசனே இல்லை.. கடவுள் தான்! சச்சினை கொண்டாடும் ரசிகர்கள்.. ட்விட்டரில் அதகளம்.. என்ன ஆச்சு?

Sachin Tendulkar| 30 Years of Sachinism| கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்

மும்பை : சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறார். சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆனதை சச்சின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கிரிக்கெட் கடவுள் இவர் தான் எனக் கூறி அவரது எல்லையில்லாத சாதனைகளை பட்டியலிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தங்கள் ஆதர்ச நாயகன் குறித்த பல தகவல்களையும், அவரது கிரிக்கெட் வாழ்வில் நடந்த பல கொண்டாட்ட தருணங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

30 ஆண்டுகள்

சச்சின் நவம்பர் 15, 1989 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். அப்போது முதல் 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி நூற்றுக்கணக்கான சாதனைகளை முறியடித்தார்.

இளம் வயதில் அறிமுகம்

இளம் வயதில் அறிமுகம்

16 வயது, 205 நாளில் அறிமுகம் ஆனார் சச்சின். தன் 17 வயது, 107வது நாளில் முதல் சர்வதேச சதம் அடித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அந்த சாதனையை செய்தார்.

சாதனை மழை

சாதனை மழை

அப்போது முதல் தொடர்ந்து சாதனைகள் செய்து வரும் சச்சின், கிரிக்கெட்டின் கடவுள் என்றே ரசிகர்களால் போற்றப்படுகிறார். பல முறை தனி ஆளாக இந்திய அணியை கரை சேர்க்க போராடி இருக்கிறார்.

கோடிக்கணக்கான ரசிகர்கள்

கோடிக்கணக்கான ரசிகர்கள்

சச்சின் அவுட் ஆனால், அதன் பின் அந்தப் போட்டியை பார்க்க மாட்டோம் என பிடிவாதமாக இருந்த ரசிகர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கும். அவர்கள் தான் இப்போது ட்விட்டரை அதகளம் செய்து வருகிறார்கள்.

சாதனைப் பட்டியல்

சச்சினின் மலைக்க வைக்கும் சாதனைப் பட்டியலை வெளியிட்டுள்ளார். மொத்தமாக 664 கிரிக்கெட் போட்டிகளில் 34,357 ரன்கள் குவித்துள்ளார் சச்சின். 50,816 பந்துகளை சந்தித்துள்ளார். 100 சதங்களை அடித்துள்ளார். இன்னும் இந்தப் பட்டியல் நீள்கிறது.

முதல் இரட்டை சதம்

முதல் இரட்டை சதம்

ஒருநாள் போட்டிகளில் முதல் இரட்டை சதம் அடித்தது சச்சின் தான். டி20 கிரிக்கெட்டின் வரவுக்கு பின், ஒருநாள் கிரிக்கெட் தன் முகத்தை மாற்றிக் கொண்டு வந்த காலத்தில், அதிரடி ஆட்டம் ஆடி இரட்டை சதம் அடித்து இளம் வீரர்களை மிரள வைத்தார் சச்சின்.

முதல் சாதனை

சச்சின் முதல் ஆளாக பல சாதனைகளை செய்துள்ளார். அவற்றில் சில - 10,000 ஒருநாள் போட்டி ரன்கள், 50 சதம் மற்றும் 100 சர்வதேச சதங்கள், 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர், பாரத ரத்னா விருது பெற்ற முதல் கிரிக்கெட் வீரர்.

90ஸ் கிட்ஸ் கிரிக்கெட்

90ஸ் கிட்ஸ்-க்கு கிரிக்கெட் என்றாலே சச்சின் தான். 90களில் பலரும் கிரிக்கெட் பார்க்க முக்கிய காரணமாக இருந்தவர் சச்சின் தான் என்பதில் சந்தேகமில்லை.

தனி ஒருவன் சச்சின்

பல முறை சச்சின் மட்டும் தனி ஆளாக பேட்டிங்கில் கலக்குவார். எதிரணிகள் அவரை வெளியேற்ற முடியாமல் அடுத்து வரும் வீரர்களை குறி வைப்பார்கள். அதைக் குறிப்பிடும் வகையில் இருக்கிறது இந்த புகைப்படம்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
30YearsOfSachinism : Sachin trending in twitter after 30 years of his debut
Story first published: Friday, November 15, 2019, 11:37 [IST]
Other articles published on Nov 15, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X