Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி டொக்காயிட்டதா யாரு சொன்னா? சத்தமின்றி சச்சின் சாதனையை தாண்டியாச்சு

மொகாலி: "டோணி டொக்காகிவிட்டார்.." என அவரது ஹேட்டர்கள் நாக்கு மீது பல்லைப் போட்டு ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்கும்போதே, "நான் வந்துட்டேன்னு சொல்லு, எப்படி போனேனோ அப்படியே வந்துட்டேன்னு சொல்லு.." என சச்சின் டெண்டுல்கர் ரெக்கார்டு ஒன்றை உடைத்தபடி வந்து நின்றதோடு, தனது உடைந்துபோன பல்லை காட்டி, சிரிக்கிறார் டோணி.

ஆம்... நேற்றிரவு மொகாலியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டோணி 80 ரன் குவித்து மேன் ஆப் தி மேட்ச், கோஹ்லிக்கு நல்ல கம்பெனி கொடுத்த தருணத்தில்தான் இந்த சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

டோணி என்றாலே சிக்சர்தான். நேற்றைய ஆட்டத்திலும், அதற்கு வஞ்சனை வைக்கவில்லை அவர். நேற்று, டோணி மொத்தம் 3 சிக்சர்கள் விளாசினார். அதில் 3வது சிக்சர் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்தபோது, சச்சினின் சாதனையொன்றையும் தூக்கி எல்லைக்கோட்டுக்கு அந்த பக்கம் போட்டுவிட்டது அந்த பந்து.

சிக்சர் மன்னர்

சிக்சர் மன்னர்

எஸ்.. டோணி தனது 281வது போட்டியில் விளாசிய 196 சிக்சர் அது. இதன் மூலம், அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை சூடிக்கொண்டுள்ளார் டோணி. முன்னதாக, 195 சிக்சர்களுடன், சச்சின் அந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். உலக அளவில் 'காட்டடி' அப்ரிடி இதில் முதலிடத்திலுள்ளார். அவர் விளாசிய சிக்சர்கள் 351.

இவங்களையும் பாருங்க

இவங்களையும் பாருங்க

அதிக சிக்சர்கள் பட்டியலில் இலங்கையின் ஜெயசூர்யா 270 சிக்சர்களுடனும், மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் 238 சிக்சர்களுடனும், நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் 200 சிக்சர்களுடன், 2வது முதல் 4வது வரையிலான எண்ணிக்கைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த வகையில், உலகின் 5வது சிக்சர் மன்னர் டோணிதான். சச்சின் தற்போது 6வது இடத்தில் உள்ளார்.

பெஸ்ட் சிக்சர்

பெஸ்ட் சிக்சர்

டோணி எத்தனை சிக்சர்களை விளாசியிருந்தால், அவற்றுக்கு மகுடம் சூட்டியதும், மக்கள் மனங்களில் இருந்து மறையாததும் அந்த ஒரு சிக்சர்தான். அது எந்த சிக்சர் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். 2011ம் ஆண்டு உலக கோப்பை பைனலில், இலங்கையின் குலசேகரா வீசிய பந்தை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்சருக்கு விளாசி, "Dhoni finishes off in style" என கமாண்டேட்டர்களை கத்தி கோஷமிட வைத்த அந்த சிக்சர்தான் அது.

பெரும் புள்ளிகளுடன்

பெரும் புள்ளிகளுடன்

மேலும், நேற்றைய போட்டியில் டோணி 9000 ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் என்ற எலைட் பேட்ஸ்மேன்கள் குழுவிலும் இடம் பிடித்துள்ளார். சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், அசாருதீன் ஆகிய பெயர் சொல்லும் பிள்ளைகள் உள்ள இப்பட்டியலில் இப்போது டோணிக்கும் இடம் கிடைத்துள்ளது. இறுதி கட்டங்களில் களமிறங்கும் பழக்கம் கொண்டிருந்தபோதிலும், டோணி 9000 ரன்களை அனாயாசமாக கடந்துள்ளது சிறப்பு.

Story first published: Monday, October 24, 2016, 12:29 [IST]
Other articles published on Oct 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+