Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலககோப்பை - ரோகித் சர்மா முன் காத்திருக்கும் 4 சவால்கள்.. தோனி சாதனையை முறியடிப்பாரா?

மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி எவ்வாறு செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.12 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு தோனி உலக கோப்பையை வென்று கொடுத்தாரோ அதேபோல் ஒரு சாதனையை ரோகித் சர்மா படைப்பாரா என்பது தான் அனைவர் மனதிலும் கேள்வி தீயாக எரிகிறது.

இந்த நிலையில் நடப்பு உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன என்று தற்போது பார்க்கலாம்.உலகக் கோப்பை என்பது மிகப்பெரிய நெருக்கடியை ஒரு வீரருக்கு ஏற்படுத்தும்.அதுவும் கேப்டன் என்றால் சொல்லவே தேவையில்லை. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் கூட தோனி அதிரடியாக விளையாடினார்.

Rohit sharma

ஆனால் தொடர் தொடங்கியவுடன் தோனியால் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை ஒரு அரை சதம் கூட அடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதே போல் ஒரு நிலை ரோகித் சர்மாவுக்கும் ஏற்படலாம். ஆனால் தோனியை போல் ரோகித் சர்மா கீழ் வரிசை வீரர் கிடையாது.

தொடக்க வீரர் என்பதால் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமா இல்லையா என்பது ரோகித் சர்மாவின் ஆட்டத்தில் தான் இருக்கிறது. அவர் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தால் மட்டுமே நம்மால் பெரிய ஸ்கோரை நினைக்க முடியும். கேப்டன் பொறுப்பையும் ஏற்று பேட்ஸ்மேன் ஆகவும் ரோகித் சர்மா ஜொலிக்க வேண்டும். ரோகித் சர்மாவுக்கு இருக்கும் அடுத்த பிரச்சனை களத்திற்கு ஏற்ப ப்ளேயிங் லெவனை தேர்வு செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு மைதானத்தின் அளவு சிறியதாக இருந்தால் சுழற் பந்துவீச்சாளர்களை இரண்டு பேரை தேர்வு செய்தாலே போதும். இல்லை உதாரணத்திற்கு 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அஸ்வினை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்திய நிலையில் தோனி மைதானத்தின் அளவு ஒரு முனையில் சிறியதாக இருப்பதால் ஸ்ரீ சாந்தை பிளேயிங் லெவனில் சேர்த்தார். இப்படி சூழலுக்கு ஏற்ப உள்ளுணர்வு படி ரோகித் சர்மா செயல்பட வேண்டும்.

ஏற்கனவே நெருக்கடியான சமயத்தில் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் கேப்டனாக சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார் என்பதால் அவருக்கு நிச்சயமாக அந்த அனுபவம் கை கொடுக்கும். மேலும் டாசை வென்றால் என்ன செய்வது? அணியின் ஸ்கோரை எப்படி கட்டமைப்பது ?முதல் 10 ஓவரில் எவ்வாறு ரன்கள் சேர்ப்பது? பீல்டர்களை எப்படி நிறுத்துவது என்ற பல சவால்கள் தற்போது ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கிறது. பிளேயிங் லெவன் மற்றும் எந்த பேட்ஸ்மேனை எந்த பவுலரால் சமாளிக்க முடியும் போன்ற யுக்தி ஆகியவற்றில் மட்டும் ரோகித் சர்மா கவனம் செலுத்தினால் நிச்சயமாக இந்த உலகக் கோப்பையில் அவரால் சாதிக்க முடியும்.

பிளேயிங் லெவன் மற்றும் எந்த பேட்ஸ்மேன் எந்த பவுலரால் சமாளிக்க முடியும் போன்ற யுக்தி ஆகியவற்றில் மட்டும் ரோகித் சர்மா கவனம் செலுத்தினால் நிச்சயமாக இந்த உலகக் கோப்பையில் அவரால் சாதிக்க முடியும்.

Story first published: Wednesday, October 4, 2023, 14:37 [IST]
Other articles published on Oct 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+