சிஎஸ்கே அணியில் இம்பேக்ட் வீரர்கள் யார் ?தோனி யாரை எப்போது பயன்படுத்துவார்? மாஸ்டர் ஸ்ட்ரோக் விவரம்
சென்னை : ஐபிஎல் தொடரில் இம்முறை பல சுவாரஸ்யத்தை பிசிசிஐ கூட்டி இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று இந்த இம்பேக்ட் பிளேயர் விதி தான். இதன் மூலம் ஐபிஎல் தொடரின் வடிவமே தலைகீழாக மாற உள்ளது.
ஆடுகளம் திடீரென்று சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறினாலும், இல்லை எதிரணி வேகப்பந்துவீச்சை சமாளிக்க திணறினாலும், நாம் ஆட்டத்தின் எந்த நேரத்திலும் இந்த இம்பேக்ட் வீரர்கள் விதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதே போன்று பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் ஆட்டமிழந்துவிட்டார்கள், இதனால் கைவசம் எந்த பேட்ஸ்மேனும் இல்லை என்றால் கூட, கடைசி நேரத்தில் இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தி நாம் ஒரு பேட்ஸ்மேனை களமிறக்க முடியும். எனினும் பிளேயிங் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்கள் இருந்தால், இம்பேக்ட் வீரராக இந்திய வீரர்களை தான் பயன்படுத்த முடியும்.

ஹங்கர்கேக்கர்
சிஎஸ்கே அணியில் உள்ள இம்பேக்ட் பிளேயர்ஸ் யார் என்பதை தற்போது பார்க்கலாம். குட்டி ஹர்திக் பாண்டியா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ராஜவர்த்தன் ஹங்கர்கேகரை சிஎஸ்கே பயன்படுத்தலாம். அதிரடி பேட்ஸ்மேனாக விளங்க கூடிய ஹங்கர்கேகர், கீழ்வரிசையில் இமாலய சிக்சர்களை அடிக்க கூடியவர். இதே போன்று பந்துவீச்சிலும் அதிவேகமாக செயல்பட்டு நெருக்கடி கொடுப்பார்.

சிவம் துபே
சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள சிவம் துபேவும் இம்பேக்ட் பிளேயராக தோனி பயன்படுத்த வாய்ப்பு இருக்கும். கடந்த சீசன்களில் கூட சிவம் துபே தனது பேட்டிங் திறமையை பயன்படுத்தி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணிக்கு பேட்டிங் சிக்கல் எழுந்தால், நிச்சயம் சிவம் துபே நல்ல சாய்சாக இருப்பார்.

நிஷாந்த் சிந்து
இதே போன்று அண்டர் 19 வீரர் நிஷாந்த் சிந்துவும் இம்பேக்ட் பிளேயராக தனது திறமையை நிரூபிக்க காத்து கொண்டுள்ளார். அடுத்த ஜடேஜாவாக நிஷாந்த் சிந்து வர அதிகம் வாய்ப்பு இருக்கிறது. பேட்டிங்கிலும், சுழற்பந்துவீச்சிலும் கலக்க கூடிய நிஷாந்த் சிந்து தோனிக்கு துருப்புச் சீட்டாக நிச்சயம் இருக்கலாம்.

ரஹானே
இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் வீரர் ரஹானே தான். சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அப்போது விக்கெட்டுகள் மளமளவென விழுந்தால், அதனை தனது அனுபவம் மூலம் எதிர்கொள்ள ரஹானே நல்ல சாய்சாக இருப்பார். பேட்டிங்கிலும் ரஹானேக்கு வேகமாக விளையாட தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications