Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs GT: சிஎஸ்கே அணிக்கு ஆபத்து அளிக்க கூடிய 4 குஜராத் வீரர்கள்.. சவாலை சமாளிக்குமா தோனி படை?

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் லீக் ஆட்டத்தில் வெற்றியுடன் பயணத்தை தொடங்குவது யார் என்ற போட்டி சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் இடையே உள்ளது. இதுவரை குஜராத்துடன் விளையாடிய 2 ஆட்டங்களிலும் சிஎஸ்கே தோற்றுவிட்டதால், திருப்பி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே இருக்கிறது. சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் கிங்க இருந்தாலும், இது போன்ற அந்நிய மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிஎஸ்கே வெல்ல வேண்டும்.

ஏனென்றால், சிஎஸ்கே விளையாடும் முதல் 8 போட்டிகளில், ஐந்தில் வெளியூரில் தான் சிஎஸ்கே விளையாடுகிறது. குஜராத் அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் முதல் போட்டியில் விளையாடவில்லை என்றாலும், அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் பலமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு சவால் அளிக்க கூடிய வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.

csk vs gt 2023

சுப்மன் கில்

சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வீரராக சுப்மன் கில் இருப்பார். தற்போது கில் செம பார்மில் இருக்கிறார். கில் கொஞ்சம் நிலைத்து ஆடினால், எதிரணிக்கு எப்போதுமே சிக்கல் தான். இதனால் கில் தன்னுடைய இன்னிங்சை கட்டமைப்பதற்கு முன்பே அவரை ஆட்டமிழக்க வைக்க வேண்டும்.

ரஷித் கான்

சிஎஸ்கே அணிக்கு அடுத்து பெரிய சவாலை அளிக்க கூடியவர் ரஷித் கான் தான். இவர் வீசும் 4 ஓவர்கள் தான் அட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இதனால் ரஷித் கானை சிஎஸ்கே எதிர்கொள்வதை பொருட்டு தான்வெற்றி, தோல்வி அமையும். இதனால் ரணித் கானுக்கு எதிராக சிஎஸ்கே அதிரடியாக ஆடுமா இல்லை பொறுமை காக்குமா என்ற யுத்தியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் தோனி போன்ற அதிரடி வீரரே ரஷித் கானிடம் 24 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு முறை ஆட்டமிழந்துள்ளார்.

csk vs gt

சாய் சுதர்சன்

தமிழகத்தை சேர்ந்த இடது கை சுழற்பந்துவீச்சாளரான சாய் கிஷோர் எப்போதுமே வலது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வேட்டையாடுவதில் வல்லவர். கடந்த முறை தொடரின் இறுதியில் தான் சாய் கிஷோருக்கு ஐபிஎலில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதில் 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை கொடுத்துள்ளார். இதனால் சாய் கிஷோர், ரஷித் கான் கூட்டணி சிஎஸ்கேக்கு தலைவலி தான்.

ஹர்திக் பாண்டியா

சிஎஸ்கே அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியவர் ஹர்திக் பாண்டியா தான். பேட்டிங்கில் மட்டும் அல்லாமல் தற்போது பந்துவிச்சிலும் பாண்டியா ஜொலித்து வருகிறார். முக்கிய கட்டத்தில் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதை பழக்கமாக கொண்டுள்ளார். இதனால் குஜராத் அணியை எதிர்கொள்வது சிஎஸ்கேக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

Story first published: Friday, March 31, 2023, 7:35 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+