For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க நல்லாத்தான் ஆடுனோம்.. டீம் தான் சரியில்லை.. ஐபிஎல் அரங்கை அதிர வைத்த 4 வீரர்கள்!

மும்பை : ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு ஆடும் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றால் அடுத்த தொடரில் அந்த அணியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

Recommended Video

4 IPL players performed good after changing teams

அப்படி நீக்கப்பட்ட பின் புதிய அணியில் அதே வீரர்கள் அதிரடியாக ஆடி ரன் குவித்து அதிர வைத்த சம்பவங்கள் நடந்துள்ளன.

அப்படி நாங்கள் நல்லாத் தான் ஆடினோம்.. நாங்க முதலில் ஆடிய அணிதான் சரியில்லை என நிரூபித்த நான்கு வீரர்கள் ஆண்ட்ரே ரஸ்ஸல், கேஎல் ராகுல், டேவிட் வார்னர் மற்றும் ராபின் உத்தப்பா.

ஆண்ட்ரே ரஸ்ஸல்

ஆண்ட்ரே ரஸ்ஸல்

2019 ஐபிஎல் தொடரை பார்த்தவர்கள் ஆண்ட்ரே ரஸ்ஸல்-ஐ மறக்கவே முடியாது. அப்படி ஒரு தாண்டவம் ஆடினார். ஆனால், அவர் 2012ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஆடினார். அப்போது அவர் மோசமாக செயல்பட்டதால் பின்னர் 2014இல் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2014இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல், அந்த சீசனில் 2 போட்டிகளில் மட்டுமே ஆடினார். 2௦15இல் மிரட்டிய அவர் 326 ரன்கள் மற்றும் 14 விக்கெட் எடுத்தார். 2016இல் பேட்டிங்கில் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், பந்துவீச்சில் 15 விக்கெட்கள் வீழ்த்தினார். 2019இல் உச்சகட்டம் எட்டிய அவர் 14 போட்டிகளில் 510 ரன்கள் மற்றும் 11 விக்கெட் வீழ்த்தினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 204.81 ஆகும்.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல் 2013 ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆடினார். அவர் எடுத்த ரன்கள் வெறும் 20 மட்டுமே. அதன் பின் இரண்டு சீசன்களுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சென்றார். அங்கே ஓரளவு ரன் குவித்தவரை மீண்டும் பெங்களூர் அணி 2016இல் வாங்கியது. அந்த ஒரு தொடரில் சிறப்பாக ஆடியவர், மீண்டும் பெங்களூர் அணியில் அடுத்த ஒரு சீசனில் மோசமாக ஆடினார்.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

அதன் பின் 2018இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்ட அவர் 2018இல் 659 ரன்கள், 2019இல் 593 ரன்கள் குவித்தார். பெங்களூர் அணி அவருக்கு சரியாக அமையவில்லை. பஞ்சாப் அணியில் பட்டையைக் கிளப்பிய அவர் இப்போது அந்த அணியின் கேப்டன் பதவியையும் பெற்றுள்ளார்.

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா முதல் சில ஐபிஎல் தொடர்களில் சராசரியாக செயல்பட்டார். அதனால் ஒவ்வொரு அணியிலும் ஒன்று, இரண்டு ஆண்டுகள் என முதல் ஆறு ஆண்டுகளை கழித்தார். மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் புனே வாரியர்ஸ் என மூன்று அணிகளில் 2013 வரை ஆடினார்.

கொல்கத்தா அணியில் மிரட்டல்

கொல்கத்தா அணியில் மிரட்டல்

அதன் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2014இல் இணைந்த ராபின் உத்தப்பா அந்த சீசனில் 660 ரன்கள் குவித்து அந்த சீசனில் கொல்கத்தா கோப்பை வெல்லவும் முக்கிய காரணமாக அமைந்தார். அதன் பின் ஐந்து சீசங்கள் அதே அணியில் நீடித்தார். கடந்த சீசனில் மட்டும் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தான் முதலில் ஆடினார். 2009 சீசனில் 7 போட்டிகளில் 163 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின் நான்கு சீசங்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடிய டேவிட் வார்னர் அந்த நான்கிலும் 500 ரன்களுக்கும் மேல் குவித்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களில் அதிக ரன் குவித்த வீரர் டேவிட் வார்னர் தான். 126 போட்டிகளில் 4706 ரன்கள் குவித்துள்ளார். இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தான் அவர் சிறப்பாக செயல்பட்டார். 2016இல் அவர் 848 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 20, 2020, 15:09 [IST]
Other articles published on May 20, 2020
English summary
4 IPL players proved they are better batsmen after changing teams
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+