Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையை வெல்லுமா இந்தியா.. முக்கிய பங்கு வகிக்கும் 4 பேட்ஸ்மேன்கள்.. இவங்க கையில் தான் இருக்கு

துபாய் : ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது.

Recommended Video

Asia Cup 2022: Select ஆகாத Deserved Players| Aanee's Appeal | *Cricket

இதில், இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், 4 பேட்ஸ்மேன்கள் மீது அனைவரின் கவனம் திரும்பியுள்ளது.

இந்த 4 பேட்ஸ்மேன்கள் எப்படி சிறப்பாக விளையாடுகிறார்களோ, அதை பொறுத்து தான் இந்திய அணியின் வெற்றி இருக்கும்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இந்திய டி20 அணியில் தற்போது நட்சத்திர வீரராக விளங்குகிறார் சூர்யகுமார் யாதவ். டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் கூட 2வது இடத்தில் இருக்கிறார். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சில் பட்டையை கிளப்பும் சூர்யகுமாரின் பேட்டிங்கை நம்பியே இந்திய அணி உள்ளது.பிளேயிங் லெவனில் அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பு கிடைக்குமா, இல்லை நடுவரிசையில் கிடைக்குமா என்பதும் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இந்திய டி20 அணியில் பினிஷர் ரோலில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக் தான் வரும் ஆசிய கோப்பையில் பெரும் பங்கு ஆற்ற உள்ளார். துபாய் ஆடுகளம் கொஞ்சம் தொய்வாக இருக்கும். இதனால் முன்வரிசை வீரர்கள் பெரிதாக அதிரடி ஆட்டத்தை ஆட முடியவில்லை என்றால், தினேஷ் கார்த்திக் தான் இறுதியில் வந்து ரன் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும்.

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

ஒவ்வொரு அணிக்கும் தொடக்கம் நன்றாக இருந்தால் தான் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இதனால் ரோகித் சர்மாவை நம்பி தான் இந்தியாவின் பேட்டிங்கே இருக்கிறது என்று சொல்லலாம். ரோகித் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்துவிட்டால், அதன் பிறகு வரும் பேட்ஸ்மேன்கள் அதனை பயன்படுத்தி கொண்டு பெரிய இலக்கை நிர்ணயம் செய்வார்கள். இந்திய அணியின் உயிர் நாடியே ரோகித் சர்மா என்று கூறலாம்.

விராட் கோலி

விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள ஒவ்வொரு ரசிகரும் விராட் கோலி எப்போது ஃபார்ம்க்கு திரும்புவார் என காத்து கொண்டுள்ளனர். இந்திய அணி வெற்றி பெறுவதும், தோற்பதும் விராட் கோலி எப்படி விளையாடுகிறார் என்பதை பொருத்தே உள்ளது. பொதுவாக பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் கோலி, இந்த தொடரில் பழைய ஃபார்மை மீட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, August 24, 2022, 13:06 [IST]
Other articles published on Aug 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+