Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs GT: ஐபிஎல் 2023 - குஜராத்துக்கு எதிரான முதல் ஆட்டம்.. சிஎஸ்கே சந்திக்க போகும் 4 பிரச்சினை

அகமதாபாத் : ஐபிஎல் 16வது சீசனில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள சிஎஸ்கே அணி, தனது முதல் லீக் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது யார் என்பதை தீர்மாணிக்கவே அவ்வளவு கடினமாக இருக்கிறது. இப்படி கணிக்க முடியாத போட்டிகள் நிறைந்த தொடராக 16வது சீசன் விளங்குகிறது.

குஜராத்துக்கும், தமிழ் நாட்டுக்கும் உள்ள பந்தத்தை கொண்டாடும் விதமாக அண்மையில் தான் விழா ஒன்று நடத்தப்பட்டது. காலாச்சார உறவில் பின்னி பினைந்து இருந்தாலும், கிரிக்கெட் உறவில் குஜராத் கை தான் ஒங்கி இருக்கிறது. குஜராத் அணியை சிஎஸ்கே 2 போட்டியில் வென்று இரண்டிலுமே தோல்வியை தழுவி இருக்கிறது.

4 Major Concern for CSK ahead of IPL 2023 opening game vs GT

இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன என்பதை தற்போது காணலாம். டி20 போட்டியை பொறுத்தவரை டேத் ஓவரில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகள் எடப்பது மிகவும் முக்கியம். ஒரு காலத்தில் பிராவோ அந்த பணியை செய்தார். தற்போது அந்த இடம் காலியாகவே உள்ளது. தற்போது பிரிட்டோரியஸ் மட்டுமே இருக்கிறார். இது சிஎஸ்கே வின் மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதே போன்று சிஎஸ்கே அணியில் தொடக்க ஓவர்களை வீச தீபக் சாஹர் இருக்கிறார். அவரும் நீண்ட காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்புவதால், அவர் எந்த அளவுக்கு பார்மில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. இவரை தவிர கூடுதலாக எந்த அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லை.

சிஎஸ்கே அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளர் இலங்கையின் தீக்சனாவும், வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவும் அணியில் இல்லை. இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னரை வைத்து தான் தோனி சமாளிக்க வேண்டும். ஆனால் அகமதாபாத் ஆடுகளத்தில் 3 சுழற்பந்துவீச்சாளருக்கு தேவை இருக்காது.

4 Major Concern for CSK ahead of IPL 2023 opening game vs GT

இதே போன்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாடும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். அம்பத்தி ராயுடு, தோனி ஆகியோர் தொழில்முறை கிரிக்கெட் போட்டியில் விளையாடி நீண்ட காலமாகிவிட்டது. இதனால் பேட்டிங்கில் சிஎஸ்கே எப்படி ஒருங்கிணைந்த செயல்படும் என்பது கவலை அளிக்கும் விசயமாகவே இருக்கிறது.

Story first published: Friday, March 31, 2023, 7:50 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+