Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்.. 4 இந்திய வீரர்களுக்கு முக்கிய போட்டி இது.. காரணம் என்ன?

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மும்பையில் இன்று விளையாடுகிறது.

இந்த தொடர் இந்திய அணியில் உள்ள 4 முக்கிய வீரர்களுக்கு மிக முக்கியமான தொடராகும். உலககோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அணியை கட்டமைக்கும் முயற்சியில் ரோகித் சர்மா உள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், அவர்களுக்க மாற்று வீரராக பங்கு பெற்றவர்கள் தங்களடைய இடத்தை உறுதி செய்ய போராடுவார்கள்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக இருக்கும் சூர்யகுமார், ஒருநாள் அணியில் தனது இடத்தை உறுதி செய்ய போராடி வருகிறார். டி20 போட்டியில் விளையாடுவதை போல், ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் விளையாடுவதில்லை. 18 இன்னிங்சில் விளையாடி வெறும் 2 அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். சராசரி வெறும் 28 என்று அளவில் உள்ளது. இதனால், நடப்பு தொடரில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சூர்யகுமார் உள்ளார்.

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

இந்திய அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டி இருப்பதால், மூன்று வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஆல்ரவுண்டராக இருக்க வேண்டியது அவசியம். ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளயும், ரன்களையும் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் ஷர்துல் முக்கிய பங்காற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்போது தான் அவருடைய இடம் உறுதியாகும்.

ஜடேஜா

ஜடேஜா

காயம் காரணமாக ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த சில காலமாக விளையாடமால் இருந்தார், இந்யித அணியின் மிக முக்கியமான வீரராக ஜடேஜா விளங்கி வருகிறார். எனினும் காயத்திலிருந்த திரும்பியுள்ள அவர் தன்னுடய பழைய பார்மை மீட்க ஆஸ்திரேலிய தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதே போன்று ஜடேஜா பேட்டிங்கில் அதிரடியாக இந்த தொடரில் விளையாட வேண்டிய நிலையில் உள்ளார்.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

இந்திய கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களதக விவாதத்தை ஏற்படுத்தி கூடிய தொடராக ராகுல் மாறிவிட்டார். வங்கதேசத்திற்கு எதிராக ஒருநள் போட்டியில் அரைசதம் அடித்த பிறகு ராகுல் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதே போன்று டெஸ்ட் போட்டியில் சொதப்பியதால் தனது இடத்தை இழந்தார். ஏற்கனவே வாய்ப்புக்காக சஞ்சு சாம்சன் காத்துள்ள நிலையில்,ராகுலுக்கு இது முக்கிய டராக பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, March 17, 2023, 11:39 [IST]
Other articles published on Mar 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+