Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 இந்திய வீரர்களுக்கு பெரும் ஏமாற்றம்.. டி20 உலககோப்பையில் இடம் இல்லை.. காரணம் என்ன?

மும்பை: ஐசிசி டி20 உலககோப்பையில் 4 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது

Recommended Video

T20WC இந்திய அணியில் Sanju Samson தேர்வாகாத காரணம் *Cricket

ஒவ்வொரு அணியும், வரும் 15ஆம் தேதிக்குள் டி20 உலகக் கோப்பை அணியை அறிவிக்க வேண்டும். அதன் படி இந்திய அணி நேற்று 15 பேர் கொண்ட பிரதான அணியையும், 4 ரிசர்வ் வீரர்களையும் அறிவித்தது.

இந்த நிலையில், இந்த பட்டியலில் ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த 4 வீரர்கள் குறித்தும், அதற்கான காரணத்தையும் தற்போது காணலாம்.

உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக்

ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக பந்து நன்றாக பவுன்சாக கூடிய ஆடுகளம் இருக்கும். அதற்கு உம்ரான் மாலிக் தகுதியான நபர் என்று அனைவராலும் அடையாளப்படுத்தப்பட்டார். அயர்லாந்து தொடரில் கூட உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஆனால், அதன் பிறகு எவ்வித அணியிலும் சேர்க்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆவேஷ் கான்

ஆவேஷ் கான்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஆவேஷ் கானை பெரிதும் நம்பிய ரோகித் சர்மா, அவருக்கு பல வாய்ப்புகளை வழங்கினார். ஆனால் எதிலும் அவர் ரோகித் நம்பிக்கையை பெறும்படி பந்துவீசவில்லை. அதன் பிறகு ஆசிய கோப்பை போட்டியிலும் அதிக ரன்கள் விட்டு கொடுத்தார். தற்போது காயம் ஏற்பட்டதால், அவர் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடரில் கூட சேர்க்கப்படவில்லை.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

இந்திய அணியில் குல்தீப் யாதவ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவ், தற்போது இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஏற்கனவே அஸ்வின், அக்சர் பட்டேல், பிஸ்னாய், சாஹல் அணியில் உள்ள நிலையில், குல்தீப்க்கு இடம் கொடுக்கவிலை.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலேயே அதிர்ஷ்டம் இல்லாத வீரராக சஞ்சு சாம்சன் கருதப்படுகிறார். ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஷாட்கள் ஏற்ற வகையில் இருக்கும் என்று ரோகித் சர்மா பலமுறை பேட்டி கொடுத்து இருக்கிறார். தனக்கு கிடைத்த வாய்ப்பையும் நன்றாக பயன்படுத்தி கொண்ட சஞ்சு சாம்சனுக்கு ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்கா மற்றும் டி20 உலககோப்பை என 3 தொடரில் வாய்பபு கிடைக்காதது ஏன் என்று அந்த கடவுளுக்கு தான் தெரியும்.

Story first published: Tuesday, September 13, 2022, 19:59 [IST]
Other articles published on Sep 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+