Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா கவனம் செலுத்த வேண்டிய 4 விசயங்கள்.. சரி செய்யலனா ஆப்பு கண்டிப்பா இருக்கு.. தலை தப்புமா

மும்பை : சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. இதில் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துடனும், 2017 ஆஸ்திரேலியா உடனும், தற்போது 2023ஆம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தான் சிவிப்பு நிற பந்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய அணி இந்தூர் டெஸ்டில் தவறான பாதையை தேர்ந்து எடுத்து அடி வாங்கியுள்ளதால், கடைசி டெஸ்டில் என்ன விசயங்களை சரி செய்ய வேண்டும் என்பதை தற்பாது பார்க்கலாம்.

இந்திய அணியில் உள்ள முக்கிய பிரச்சினையே தற்போது பேட்டிங் தான். இந்தூர் டெஸ்ட் போட்டியில் அது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்திய அணி 2 இன்னிங்சிலும் 200 ரன்களை தொட முடியவில்லை என்பதே அதற்கு சான்று.

பேட்டிங் குறை

பேட்டிங் குறை

ஒரு டெஸ்டில் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 90 ஓவர்களுக்கு மேல் பந்தை எதிர்கொண்டு விளையாட வேண்டும். இல்லையனில் முதல் இன்னிசில் குறைந்தபட்சம் 300 ரன்களை எடுக்க வேண்டும். இந்தூர் டெஸ்ட்டில் புஜாராவை தவிர வேறு எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. தொடக்க வீரர்களான ரோகித்தும், சுப்மன் கில்லும் சொதப்புகிறார்கள்

விராட் கோலி

விராட் கோலி

அதிரடியாக ஆடுகிறேன் என்ற ரோஹித் சர்மாவும் சொற்ப ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வருகிறார். இந்திய பேட்டிங் வரிசையின் முதுகு எலும்பான விராட் கோலி கடந்த 10 இன்னிங்ஸ்களாக ஒரு முறை கூட அரை சதமே அடிக்கவில்லை. அவர் மட்டும் கொஞ்சம் நிலைத்து நின்று இருந்தால், இந்திய அணியின் தோல்வி தவிர்க்கப்பட்டு இருக்கும்.

வீரர்கள் மாற்றம்

வீரர்கள் மாற்றம்

விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ள கேஎஸ் பரத் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், கடைசி டெஸ்டில் இஷான் கிஷனை ரோகித் சர்மா பயன்படுத்தலாம். இல்லையெனில் அக்சர் பட்டேலுக்கு அதிக ஓவர்கள் வழங்கும் விதமாக, ஒரு வேகப்பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு, கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் இந்திய அணி களமிறக்கலாம்.

நோ பால்

நோ பால்

இதே போன்று பந்துவீசும் முறையிலும் கொஞ்சம் மாற்றம் தேவை. குறிப்பாக நோ பால் வீசுவதை தவிர்க்க வேண்டும். நோ பாலால் எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்பட்டது என்பதை இந்திய ரசிகர்கள் கண் கூடாக பார்த்து விட்டார்கள். இதே போன்று டிஆர்எஸ் முறையை தேவையின்றி வீணடிக்காமல் ரோகித் சர்மா சரியாக பெயன்படுத்த வேண்டும்.

Story first published: Saturday, March 4, 2023, 13:21 [IST]
Other articles published on Mar 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+