Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏம்ப்பா தம்பி தூங்குற.. ஃபால்க்னரை பஞ்சராக்கிய கோஹ்லி பஞ்ச்! தொடருகிறது ஸ்லெட்ஜிங் போர்

மெல்போர்ன்: ஸ்லெட்ஜிங்கில் பெயர் பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஸ்லெட்ஜிங்கிலேயே பதிலடி கொடுத்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் விராட் கோஹ்லி. ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பால்க்னருக்கு எதிராக அவர் 4வது ஒருநாள் போட்டியிலும் சீண்டல் டயலாக் பேசியது ஆஸ்திரேலிய பத்திரிகையில் வெளியாகி சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3வது ஒன்டே கடந்த ஞாயிறன்று, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

விராட் கோஹ்லி சிறப்பாக பேட் செய்து 73 ரன்கள் எடுத்து சதம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த தருணம் அது. 35வது ஓவரை வீசிய, ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னர் சிங்கிள் எடுத்து ஓடிவந்த கோஹ்லியை பார்த்து 'எனது பந்தை அடி பார்ப்போம்' என கூறி சீண்டினார்.

பலமுறை அடிச்சாச்சுப்பா

பலமுறை அடிச்சாச்சுப்பா

ஆனால், கோஹ்லி சளைத்தவர் கிடையாதே. ஜேம்ஸ் பால்க்னரை கூப்பிட்டு, "உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். எனது வாழ்க்கையில், உங்கள் பந்தை பலமுறை அடித்து துவைத்துவிட்டேன். பேசாமல் போய் பந்த போடுப்பா" என கலாய்த்து அனுப்பினார்.

நான்காவது போட்டி

நான்காவது போட்டி

இந்நிலையில், நேற்றுமுன்தினம் கான்பெரா நகரின் மனுகா ஓவல் மைதானத்தில் 4வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்தது.

தவான், கோஹ்லி அசத்தல்

தவான், கோஹ்லி அசத்தல்

இதையடுத்து இந்தியா இரண்டாவதாக பேட் செய்தது. ரோகித் ஷர்மா விரைவில் வெளியேறினாலும், ஷிகர் தவான் மற்றும் கோஹ்லி இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

வாங்கி கட்டிய ஃபால்க்னர்

வாங்கி கட்டிய ஃபால்க்னர்

இந்த போட்டியில் விராட் கோஹ்லி சதம் விளாசினார். ஃபால்க்னர் பந்து வீச்சை 103 மீட்டர் தூரத்திற்கு சிக்சராக தூக்கி அவர் முகத்தில் கரியை பூசினார் கோஹ்லி. ஃபால்க்னரிடமிருந்து 16 பந்துகளை எதிர்கொண்ட கோஹ்லி 29 ரன்களை விளாசி, முடிந்தால் அடித்துப்பார் என்று கூறிய ஃபால்க்னருக்கு பேட்டால் பதில் சொன்னார்.

ரன்-அவுட் மிஸ்

ரன்-அவுட் மிஸ்

இந்நிலையில், அப்போட்டியில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவத்தை ஆஸ்திரேலிய பத்திரிகையொன்று தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, கோஹ்லி ரன் ஓடியபோது, அவரை ரன்-அவுட் செய்ய ஃபால்க்னருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்பதால் கோஹ்லி தப்பினார்.

தூங்காம வேலைய பாரு

தூங்காம வேலைய பாரு

இந்த ரன்-அவுட் சான்ஸை கவனித்த கோஹ்லி, "ஏம்ப்பா நீ தூங்குற" என ஃபால்க்னரை பார்த்து கேட்டாராம். இதற்கு பதில் சொல்ல முடியாமல் ஃபால்க்னர் திணறியதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பேஸ்புக்கில் ரசிகர்களோடு சமீபத்தில் உரையாடிய கோஹ்லி, தனக்கு அந்த நிமிடத்தில் தோன்றுவதை கூறுவதாகவும், திட்டமிட்டு பேசுவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

ஸ்லெட்ஜிங்

ஸ்லெட்ஜிங்

நான் பதிலடி கொடுப்பது பெரும்பாலும் டைமிங்காக அமைந்துவிடுவதாகவும், இரு தரப்புமே எல்லைமீறால் சீண்டிக்கொள்ள உரிமையுள்ளது என்றும் கோஹ்லி தெரிவித்திருந்தார். எது எப்படியோ, அடுத்த ஒன்டே போட்டியிலும், கோஹ்லி vs ஃபால்க்னர் மோதலை எதிர்பார்க்கலாம்.

Story first published: Friday, January 22, 2016, 11:29 [IST]
Other articles published on Jan 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+