
வெளியேறியவர்கள் யார்?
இந்நிலையில் இந்திய அணியில் இருந்து ஒவ்வொரு வீரர்களாக அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். இலங்கை தொடரில் இருந்து ஏற்கனவே நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதே போல துணைக்கேப்டன் கே.எல்.ராகுலும் காயம் காரணமாக வெளியேறினார்.

தீபக் சஹார்
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அட்டகாசமாக பவுலிங் வீசிய தீபக் சஹார் தசைநார் கிழிவு காரணமாக சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரும் தொடரில் பங்கேற்கப்போவதில்லை. இதனையெல்லாம் விட பெரும் ஷாக்காக அமைந்தது இன்று காலை வெளியான அறிவிப்பு தான். சூப்பர் ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ்-ம் காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

ஃபார்மில் இருக்கும் வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த 4 வீரர்கள் தான். விராட் கோலி - ரிஷப் பண்ட் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப், தீபக் சஹாரின் முக்கிய விக்கெட்கள் பெரும் பங்காற்றின. 3 போட்டிகளிலுமே சூர்யகுமார் யாதவ் 34* (18), 8, 65 (31) என அசத்தியிருந்தார்.

தவித்து வரும் ரோகித்
இந்திய அணியின் பேட்டிங்கில் 4 சீனியர்கள், பவுலிங்கில் ஒரு முக்கிய வீரர் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் மாற்றாக இளம் வீரர்கள் தான் வாய்ப்பு பெற போகிறார்கள். எனவே ரோகித் சர்மா எப்படி சமாளிக்கப்போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications