For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??

மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 திட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended Video

Zimbabwe தொடரில் 2 India வீரர்களுக்கு மட்டும் தீவிர பயிற்சி *Cricket

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி ப்ளேயிங் 11

இந்திய அணி ப்ளேயிங் 11

இந்த போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11-ஐ உருவாக்கும் பணிகளில் தற்போது கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் பயிற்சியாளர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் ஈடுபட்டுள்ளனர். சீனியர் வீரர்கள் ஆசிய கோப்பைக்காக தயாராவதால், இளம் வீரர்கள் அதிகம் வாய்ப்பு பெறவுள்ளனர். அந்தவகையில் இந்த தொடரில் மொத்தமாகவே 3 சீனியர் வீரர்கள் தான் இருப்பார்கள் எனத் தெரிகிறது.

5 ஓப்பனிங் பேட்ஸ்மேன்

5 ஓப்பனிங் பேட்ஸ்மேன்

ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் துணைக் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்குவார்கள். 2வது விக்கெட்டிற்கு ஓப்பனிங் வீரராக உள்ள சுப்மன் கில் களமிறக்கப்படலாம். இதனை தொடர்ந்து மிடில் வரிசையையும் ஓப்பனிங் வீரர்களான சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் ஆகியோர் தான் நிரப்பவுள்ளனர். தீபக் ஹூடா 6வது வீரராக களமிறங்குவார்.

வித்தியாசமான முடிவு

வித்தியாசமான முடிவு

இந்திய அணியின் சமீபத்திய போட்டிகளில் ஓப்பனிங் வீரர்கள் வாய்ப்பே கிடைக்காமல் இருக்க, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓப்பனிங்கிற்கு களமிறக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அப்படியே மாறாக ஓப்பனிங் வீரர்கள் இந்திய அணியின் டாப் ஆர்டரை கவர் செய்யும் வகையில் ப்ளேயிங் 11 வந்துள்ளது.

இக்கட்டான நிலை

இக்கட்டான நிலை

கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரிலும் விளையாடக்கூடியவர் தான். ஆனால் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் ஓப்பனிங் வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார். எனவே அந்த போட்டிக்கு தயாராகும் வகையில் ஜிம்பாப்வே தொடரிலும் ஓப்பனிங் வீரராக மட்டுமே விளையாட வேண்டியுள்ளது.

Story first published: Wednesday, August 17, 2022, 16:47 [IST]
Other articles published on Aug 17, 2022
English summary
India vs zimbabwe 1st ODI match ( இந்தியா vs ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி ) ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 வித்தியாசமாக அமைந்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+