Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 பிரமாண்ட சாதனைகள்.. டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுக்கு கிடைக்கும் பெருமை.. முழு விவரம்!

பெர்த்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 5 பிரமாண்ட சாதனைகளை படைக்கவுள்ளார்.

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

இந்த முறை ரோகித் சர்மாவின் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் 5 சிறப்பான சாதனைகளை இந்த தொடரில் படைக்கவுள்ளார்.

அதிகபட்ச ரன்கள்

அதிகபட்ச ரன்கள்

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை ரோகித்திற்கு உள்ளது. இந்த தொடரில் இன்னும் 169 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது இலங்கை ஜாம்பவான் மகிலா ஜெயவர்த்தனேவின் முதலிடத்தில் உள்ளார்.

மகிளா ஜெயவர்தனே : 1016

கிறிஸ்த கெயில் : 965

திலகரத்ன தில்ஷன் : 897

ரோஹித் சர்மா : 847

முக்கிய சதம்

முக்கிய சதம்

டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை ( 4 ) விளாசியவர் ரோகித் சர்மா. ஆனால் இந்த தொடரில் ஒரு சதமடிக்கும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதமடிக்கும் முதல் கேப்டன் என்ற பெருமையை பெறுவார். இதே போல அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்யும் கேப்டனாகவும் ரோகித் உருவெடுக்கலாம். கடந்த 2012ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக இருந்த கிறிஸ் கெயில் 98 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

அதிகப்போட்டி

அதிகப்போட்டி

கடந்த 2007ம் ஆண்டு முதல் அனைத்து டி20 உலகக்கோப்பை தொடரிலும் விளையாடிய வீரர் என்ற பெருமை ரோகித்திற்கு உள்ளது. அவர் தற்போது வரை 33 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்னும் 3 போட்டிகளில் விளையாடினால் டி20 உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற திலகரத்னே தில்சான் சாதனையை தகர்ப்பார்.

தனிநபர் ஸ்கோர்

தனிநபர் ஸ்கோர்

டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த வீரராக பிரண்டன் மெக்கலம் உள்ளார். அவர் 123 ரன்களை அடித்துள்ளார். ஒருவேளை இந்த தொடரில் ஒரே ஒரு சதமடித்தால் 124 ரன்களை அடித்தால் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

 அதிகபட்ச சிக்ஸர்

அதிகபட்ச சிக்ஸர்

டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா இதுவரை 31 சதங்களை அடித்துள்ளார். இவர் இன்னும் 3 சிக்ஸர்களை விளாசினால், டி20 உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு யுவராஜ் சிங் 33 சிக்ஸர்களை அடித்ததே அதிகபட்சமாக உள்ளது.

Story first published: Saturday, October 15, 2022, 21:10 [IST]
Other articles published on Oct 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+