Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரும் ஷார்ஜா.. ஒரே மேட்சில் 5 "தமிழர்கள்".. பவுலிங்கை தொடக் கூட முடியல - பரிதாப நிலையில் டெல்லி

ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.28) டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில், முதல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா தில்லாக பவுலிங்கை தேர்வு செய்ய, பலம் வாய்ந்த டெல்லி அணி முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

 4 தமிழக வீரர்கள்

4 தமிழக வீரர்கள்

இதில், கொல்கத்தா அணியில் நான்கு தமிழ் பேசும் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் மற்றும் சந்தீப் வாரியார் ஆகிய நான்கு வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதேபோல், டெல்லி அணியில் நம்ம ரவிச்சந்திரன் அஷ்வின் விளையாடுகிறார். ஒட்டுமொத்தமாக இந்த ஒரு போட்டியில் மட்டும் களத்தில் விளையாடும் 22 வீரர்களில் 5 பேர் தமிழர்களே. அதாவது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு வீரர்கள் தமிழர்களே.

 குறைந்த ரன் ரேட்

குறைந்த ரன் ரேட்

இப்போட்டியில், டெல்லி அணி சிறப்பாக தொடக்கத்தை ஏற்படுத்தினாலும், 2 விக்கெட்டுகளுக்கு பிறகு ரன் ரேட் குறைந்துவிட்டது. ஷிகர் தவான் 20 ரன்களில் 24 ரன்கள் எடுத்து கேட்ச்சாக, ஷ்ரேயாஸ் ஐயர் ஜஸ்ட் 1 ரன்னில் சுனில் நரைன் ஓவரில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் 11 ஓவர்களுக்கு உள்ளாகவே 3 ஓவர்களை வீசிவிட்டார். ஆனால், விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. குறிப்பாக, தமிழ் பேசும் வெங்கடேஷ் ஐயர் ஓவரில், அதிரடி பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மயர் 4 ரன்களில் கேட்ச்சானார். 15 ஓவர்களுக்குள்ளாகவே டெல்லி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

 நல்ல ரன் ரேட்

நல்ல ரன் ரேட்

கொல்கத்தா அணியை பொறுத்தவரை, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற, இந்த போட்டியின் வெற்றி மிக மிக முக்கியமானதாகும். இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருக்கிறது. +0.322 எனும் நல்ல ரன் ரேட் அந்த அணி வைத்துள்ளது. அதேசமயம் டெல்லி அணி 10 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

கொல்கத்தா அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. பிளே ஆஃப் முன்னேற, அனைத்து போட்டிகளிலும் அந்த அணி வென்றாக வேண்டும். டெல்லி அணி இந்த போட்டியில்க் தோற்றாலும் ஒன்றும் சிக்கல் இல்லை. மீதமுள்ள நான்கு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வென்றால் கூட, 18 புள்ளிகளுடன் அந்த அணி பிளே ஆஃப் முன்னேறிவிடும்.

Story first published: Tuesday, September 28, 2021, 17:40 [IST]
Other articles published on Sep 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+