Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சோனமுத்தா போச்சா”.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் 95% மழைக்கு வாய்ப்பு.. அது ஒன்னுதான் இனி வழி!

மெல்பேர்ன்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பார்ப்பதில் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வரும் அக்டோபர் 23ம் தேதியன்று எதிர்கொள்ளவுள்ளது.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பையில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணியும், இந்தியாவுடனான ஆதிக்கத்தை தொடர பாகிஸ்தான் அணியும் முனைப்புடன் களமிறங்கவுள்ளன.

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் இந்த தரமான மோதலை எதிர்பார்த்திருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் திடீரென வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் அக்டோபர் 23ம் தேதி தான் நல்ல பாதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்பு

மழைக்கான வாய்ப்பு

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம், இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது 95% சதவீதம் அளவிற்கு மழை பொழிவுக்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுவும் மதியம் மற்றும் மாலை நேரங்களில் கனமழையையே எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

ஐசிசி விதிமுறை

ஐசிசி விதிமுறை

டி20 உலகக்கோப்பையில் மழைக்குறுக்கிட்டால், முடிவை பெறுவதற்கு குறைந்ததற்கு 5 ஓவர்களாவது வீசப்பட வேண்டும் என்பது விதி. லீக் சுற்றில் ரிசர்வ் நாளும் இல்லை என்பதால் போட்டி தான் முழுவதும் ரத்து செய்யப்படும். எனவே வானிலை கொஞ்சமாவது இறக்கம் காட்ட வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

Story first published: Thursday, October 20, 2022, 19:02 [IST]
Other articles published on Oct 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+