Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அய்யோ..! இப்படி ஆயிடுச்சே..! ஐபில் பார்த்து அழுது, புரண்டு அலப்பறை செய்யும் சிறுவன்…! வைரல் வீடியோ

Recommended Video

சென்னை தோல்வியை கண்டு அழுது உருளும் சிறுவன்.. வைரல் வீடியோ

ஹைதராபாத்:ஐபிஎல் பைனலில் சென்னை தோற்றதை பார்த்த சிறுவன், கதறி அழுது புரளும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

கிரிக்கெட்டில் இந்தியர்களுக்கு இருக்கும் ஆர்வம் எந்த ஊரிலும் பார்க்க முடியாது. அதனை ஈர்ப்பு, காதல் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அப்படி ஒரு வெறி, இந்திய ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீது உண்டு.

இந்தியா கிரிக்கெட் விளையாடும் போதோ அல்லது தோனி விளையாடும் போதோ அவர்களின் நடவடிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கும். போட்டி என்றாலும் தோல்வியை ஏற்க முடியாமல் கதறி அழுபவர்கள் விளையாட்டில் இருக்கிறார்கள்.

மெய்மறந்து ரசனை

மெய்மறந்து ரசனை

அவர்கள் விளையாட்டு போட்டியை பார்த்து, மெய்மறந்து அதன் பின்னாடியே செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி தான் நேற்றைய இறுதி போட்டியில் சென்னை தோல்வி அடைந்ததை ஏற்க முடியாத தீவிர சிறுவன் ஒருவன் பண்ணும் அலப்பறையை பாருங்கள்.

இறுதிக்கட்ட காட்சிகள்

இறுதிக்கட்ட காட்சிகள்

அந்த சிறுவன் கையில் ரிமோட்டுடன் மேட்சை பார்த்துக் கொண்டிருக்கிறான். 20வது ஓவரில் கடைசி பந்தை மலிங்கா வீச, தாகூர் தமது விக்கெட்டை இழக்கிறார். டிவியில் அந்த காட்சிகள் ஓடுகின்றன. சென்னை தோல்வி அடைகிறது.

அழுது, உருளும் சிறுவன்

அழுது, உருளும் சிறுவன்

அதை ஜீரணிக்க முடியாத அந்த சிறுவன்... அய்யோ.... அய்யோ... மம்மி... மம்மி என்று கதறி அழுதபடி நேராக தரையில் விழுகிறான். பின்னர் எழுந்து பிதற்றிய படியே சில அடி தூரம் முன்னோக்கி செல்கிறான்.

சிறுவன் அழுகை

சிறுவன் அழுகை

பின்னர் மீண்டும் எழுந்து... தோல்வியை தாங்க முடியாமல் அய்யோ... மம்மி என்று குதியாட்டம் போடுகிறான். நேராக சில அடி தூரம் வேகமாக ஒடும் அவன் திரும்பி வந்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுகிறான்.

வளரும் தலைமுறை

வளரும் தலைமுறை

அப்போது அருகில் வரும் பெண்மணி ஒருவர் வந்து அதட்டல் போட... அதையும் கண்டு கொள்ளாமல் கதறி அழுகின்றான். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் வெம்பி அழும் இந்த இளம் தலைமுறைகளை என்னவென்று சொல்வது?

Story first published: Monday, May 13, 2019, 17:40 [IST]
Other articles published on May 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+