Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

40 நாளில் ரூ.10 கோடி சம்பாதிக்க வேண்டுமா..? கிரிக்கெட் விளையாடுங்கள்: கபில்தேவ் அழைப்பு

டெல்லி: உங்கள் பிள்ளைகள் 40 நாட்களில் ரூ.10 கோடியை சம்பாதிக்க வேண்டுமா.. கிரிக்கெட் விளையாட அனுப்பி வையுங்கள் என பெற்றோர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்.

டெல்லியில் இன்று நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தகசபை கூட்டத்தில், பங்கேற்ற, கபில்தேவ் இவ்வாறு பேசினார். மத்திய விளையாட்டு அமைச்சக செயலாளர் ராஜிவ் யாதவ் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் கபில் தேவ் பேசியதாவது:

நாட்டின் நிலைமை தற்போது மாறிவிட்டது. குழந்தைகளுக்கு படிப்பு சரியாக வரவில்லை என்றால், கிரிக்கெட் விளையாட அனுப்பலாம் என்ற மன நிலைக்கு பெற்றோர் வந்துவிட்டனர்.

தொழிலாகிவிட்டது

தொழிலாகிவிட்டது

இன்று கிரிக்கெட் என்பது விளையாட்டை தாண்டி தொழிலாக மாறிவிட்டது. 40 நாட்களில் ரூ.10 கோடியை சம்பாதிக்கும் வாய்ப்பை கிரிக்கெட் (ipl) அமைத்துக்கொடுத்துள்ளது. எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒரு சச்சின் போலவோ, ராகுல் டிராவிட்டை போலவே உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

நல்ல ஒத்துழைப்பு

நல்ல ஒத்துழைப்பு

கிரிக்கெட் விளையாட்டிற்கு கார்பொரேட் நிறுவனங்கள், விளம்பரதாரர்கள் அதிகம் ஒத்துழைப்பு தருகிறார்கள். ஸ்பான்சர்ஷிப் கிடைக்கிறது. மீடியாக்களும், கிரிக்கெட்டுக்கு அதிக விளம்பரம் தேடித்தருகிறார்கள். அவ்விரு துறைகளும் கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகுந்த உதவி செய்துவருகின்றன.

அரசு ஒத்துழைக்க வேண்டும்

அரசு ஒத்துழைக்க வேண்டும்

அதேநேரம், விளையாட்டு துறைக்கு அரசின் பங்களிப்பு மட்டுமே இன்னும் முழுமையடையாமல் உள்ளது. இன்னமும் சரியான அடிப்படை வசதிகளை அரசு செய்துதரவில்லை. போதிய மைதானங்களை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.

வரியை குறையுங்கள்

வரியை குறையுங்கள்

துப்பாக்கி சுடும் வீரர்கள், வெளிநாடுகளில் இருந்து தோட்டாக்களை வாங்குவதில் கூட ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்கள் உள்ளன. விளையாட்டு உபகரணங்களுக்கான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். இப்படி அரசு உதவி செய்தால் சாம்பியன்களை உருவாக்க முடியும் என்று கபில் தேவ் பேசினார்.

பட்ஜெட் போதாதுங்க

பட்ஜெட் போதாதுங்க

ராஜிவ் யாதவ் பேசுகையில், மத்திய நிதி அமைச்சகம் விளையாட்டு அமைச்சகத்திற்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்கிறது. எனவேதான் அடிப்படை வசதிகளை முழு வீச்சில் செய்ய முடிவதில்லை. கடந்த பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.835 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், இத்துறைக்கு ரூ.6000 கோடி தேவைப்படுகிறது என்றார்.

Story first published: Monday, February 22, 2016, 16:07 [IST]
Other articles published on Feb 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+