Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகனுக்குக் கடைசிப் போட்டி.. ஆனால் அம்மா ரஜினிக்கு இதுதான் முதல் போட்டி!

மும்பை: சச்சின் டெண்டுல்கர் ஆடும் போட்டியை முதல் முறையாக கண்டு ரசித்து வருகிறார் அவரது தாயார் ரஜினி டெண்டுல்கர்.

கடந்த 24 ஆண்டு கால சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையில் இப்போதுதான் அவரது ஆட்டத்தை முதல் முறையாக நேரில் வந்து பார்க்கிறாராம் ரஜினி டெண்டுல்கர்.

பூரித்த முகத்துடன், மகன் விளையாடுவதைப் பார்த்து சந்தோஷமாக ரசித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி டெண்டுல்கர்.

இதுவரை ஸ்டேடியம் பக்கமே வந்ததில்லை

இதுவரை ஸ்டேடியம் பக்கமே வந்ததில்லை

ரஜினி டெண்டுல்கர் கடந்த 24 ஆண்டுகளில் ஸ்டேடியம் பக்கமே வந்தது கிடையாது. சச்சின் விளையாடியதை நேரில் பார்த்ததும் கிடையாது.

உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல்

உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல்

இன்று சச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடுவதால் தனது உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் ஸ்டேடியத்திற்கு வந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.

மகனின் விருப்பத்திற்கிணங்க

மகனின் விருப்பத்திற்கிணங்க

மேலும், சச்சினுக்கும் கூட தனது கடைசிப் போட்டியை அம்மா நேரில் வந்து பார்த்து ரசிக்க வேண்டும் என்று விருப்பபட்டாராம். இதனால்தான் மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ரஜினி டெண்டுல்கர் வந்துள்ளார்.

வீல்சேரில் வந்தார்

வீல்சேரில் வந்தார்

சக்கர நாற்காலியில்தான் நடமாடி வருகிறார் ரஜினி டெண்டுல்கர். தற்போது ஸ்டேடியத்திற்கும் கூட அவர் சக்கர நாற்காலியில்தான் வந்துள்ளார். அவர் வந்து செல்வதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகளையும் கிரிக்கெட் சங்கம் செய்து கொடுத்துள்ளது.

கையில் மகன் போஸ்டருடன்

கையில் மகன் போஸ்டருடன்

சச்சின் பாரெவர் என்ற வாசகத்துடன் கூடிய சச்சின் போஸ்டரை கையில் பிடித்தபடி போட்டியை ரசித்து வருகிறார் ரஜினி டெண்டுல்கர்.

மனைவி - பிள்ளைகள்

மனைவி - பிள்ளைகள்

ரஜினி டெண்டுல்கருடன், மருமகள் அஞ்சலி, பேரப்பிள்ளைகள் அர்ஜூன் டெண்டுல்கர், சாரா ஆகியோரும் சச்சின் ஆட்டத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீக்கிரமே பேட் செய்வதால் மகிழ்ச்சி

சீக்கிரமே பேட் செய்வதால் மகிழ்ச்சி

முதலில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட் செய்யும் என்று கேப்டன் டோணி அறிவித்ததால் ரசிகர்களும், சச்சின் குடும்பத்தினரும் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஆனால் சீக்கிரமே மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் சுருண்டு விட்டதால் மகிழ்ச்சியுடன் சச்சின் பேட் செய்வதை அனைவரும் ரசித்துப் பார்க்க ஆரம்பித்தனர்.

Story first published: Thursday, November 14, 2013, 17:53 [IST]
Other articles published on Nov 14, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+