Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லா உத்துப் பாருங்க.. சச்சின் கையில் இருப்பது புது பேட்..!

மும்பை: தனது 200வது டெஸ்ட் போட்டியை ஆடி வரும் சச்சின் டெண்டுல்கர் புத்தம் புதுப் பொலிவுடன் கூடிய பேட்டுடன் ஆடி வருகிறார்.

வழக்கமாக அவர் பயன்படுத்தும் பேட் அல்ல அது. மாறாக புதிய தோற்றத்துடன் கூடிய பேட்டை தனது கடைசிப் போட்டிக்கு சச்சின் பயன்படுத்துகிறார்.

பேட்டின் கைப்பிடியில் இந்தியாவின் மூவண்ணம் இடம் பெற்றுள்ளது. பிளேட் பகுதியில் பேட் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்டிக்கர் இடம் பெற்றுள்ளது.

வழக்கமான கருப்பு இல்லை

வழக்கமான கருப்பு இல்லை

வழக்கமாக சச்சின் பயன்படுத்தும் பேட்டின் கைப்பிடி கருப்புப் பட்டையுடன் கூடியதாக இருக்கும்.

தேசியக் கொடியின் நிறம்

தேசியக் கொடியின் நிறம்

ஆனால் நேற்றைய போட்டியின்போது அவர் மூவண்ண நிறத்திலான கைப்பிடியுடன் கூடிய பேட்டைப் பயன்படுத்தினார்.

விசேஷமாக தயாரிக்கப்பட்டதாம்

விசேஷமாக தயாரிக்கப்பட்டதாம்

இந்த கைப்பிடி சச்சினுக்காகவே விசேஷமாக உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.

அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் நாட்டுக்காக

அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் நாட்டுக்காக

சச்சின் அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் இந்த நாட்டுக்காக என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. மேலும் இந்தியா மீதான தனது பாசத்தை காட்டுவதற்காகவும் இந்தக் கைப்பிடியை சச்சினே விரும்பினார் என்கிறார்கள்.

கடைகளிலும் கிடைக்கும்

கடைகளிலும் கிடைக்கும்

இதேபோன்ற பேட்டுகளை அடிடாஸ் நிறுவனம் தனது குறிப்பிட்ட சில கடைகளில் விற்பனைக்கும் வைத்துள்ளதாம். இந்த பேட்டுக்கு அடிடாஸ்-எஸ்டி அதாவது சச்சின் டெண்டுல்கர் என்றே பெயரும் வைத்துள்ளனர்.

Story first published: Friday, November 15, 2013, 9:11 [IST]
Other articles published on Nov 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+